‘ஆர்ச்சர்ட் டவர்ஸ்’: சம்பவ இடத்திற்குக் கொண்டு செல்லப்பட்ட சந்தேக நபர்கள்

‘ஆர்ச்சர்ட் டவர்ஸ்’ கடைத்தொகுதியில் ஓர் ஆடவர் கொல்லப்பட்டது தொடர்பில் குற்றம் சாட்டப்பட்ட எழுவரில் நால்வர் நேற்று குற்றம் நடந்த இடத்திற்கு மீண்டும் கொண்டு செல்லப்பட்டனர். 22 வயது நெட்டலி சியாவ் யூ சென், 26 வயது ஜொவெல் டான் யுன் ஷெங், 26 வயது சான் ஜியா சிங், 26 வயது ஆங் டா யுவன், 27 வயது டான் சென் யாங், 25 வயது லூ பூன் சோங், 22 வயது டான் ஹொங் செங் ஆகியோர் மீது கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.

ஜூலை மாதம் 4ஆம் தேதியன்று ஆறு ஆடவர்க;s. ஒரு பெண் மீதும் கொலைக்குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. நேற்று நண்பகல் 12 மணி அளவில் குற்றம் சாட்டப்பட்டவர்களில் நால்வரை போலிசார் சம்பவ இடத்திற்குக் கொண்டு செல்வதைப் பொதுமக்கள் கண்டதாக ‘ஷின் மின்’ நாளிதழ்தெரிவித்தது.கடைத்தொகுதிக்குள் சென்ற அவர்கள் கிட்டத்தட்ட 10 நிமிடங்களுக்குப் பிறகு வெளியேறினர்.

குற்றஞ்சாட்டப்பட்ட எழுவர் ஜூலை மாதம் 11ஆம் தேதியன்று நீதிமன்றத்தில் மீண்டும் முன்னிலையாகவேண்டும்.