பகுதி நேர ஊழியர்களை விரைவாகத் தேட உதவும் செயலி

பகுதி நேர ஊழியர்களை விரைவாகத் தேட உதவும் செயலி

1 mins read
26d24767-88ca-4643-a995-bad5b29c6ee9
-

உணவு பானத்துறை, சில்லறை விற்பனை மற்றும் துப்புரவு துறைகளில் ஊழியர் பற்றாக்குறையை நிறுவனங்கள் அடிக்கடி எதிர்நோக்குகின்றன. அவற்றின் தேவைகளை நிறைவு செய்யும் பொருட்டு மனிதவள விநியோக நிறுவனம் தனது செயலியின் 'கியூஆர்' குறியீடு தொழில்நுட்பத்தை மேம்படுத்துகிறது. இதன் மூலம் நிறுவனங்களைப் பகுதி நேர ஊழியர்களுடன் மூன்றே மணி நேரத்தில் இணைக்க முடிவதாக அந்நிறுவனம் கூறுகிறது. ஊழியர்கள் தேர்ந்தெடுக்கப்படும் அதே நாளில் வேலையிடத்தில் பணிபுரிய ஆரம்பிக்கவும் இது வழிவகுப்பதாக அந்நிறுவனம் சொன்னது.

"ஊழியர்களுக்கும் முதலாளிகளுக்கும் உள்ள இடைவெளியைக் குறைக்க 'கியூஆர்' குறியீடு தனித்துவமிக்க, வேகமான, பலனளிக்கக்கூடிய வழியாக இருக்கிறது. எங்கள் சேவையில் பதிவு செய்துள்ள கிட்டத்தட்ட 98,000 ஊழியர்களை முதலாளிகளால் இப்போது விரைவாக, சில நொடிகளில் நாட முடிகிறது," என்று வாய் வாய் ஹோங் யீ குழுமத்தின் நிர்வாக இயக்குநர் பாலின் இயோ தெரிவித்தார்.

வாய் வாய் ஹோங் யீ இந்தச் செயலியைக் கடந்தாண்டு ஜூலை தொடங்கியது. ஊழியர்களைத் தேடும் முதலாளிகள் 'கியூஆர்' குறியீடு ஒன்றை வருடி தங்களது தேவைகளைப் பற்றி 'வாய் வாய்'-யிடம் தெரிவிக்கலாம். உணவு, பானத்துறையைச் சேர்ந்த நிறுவனங்களுக்கு இச்செயலி உதவும் என்பது அந்நிறுவனத்தின் நம்பிக்கை.