முதலாளி மகளுக்குத் தலையில் காயம் விளைவித்த பணிப்பெண்ணுக்குச் சிறை

முதலாளி மகளுக்குத் தலையில் காயம் விளைவித்த பணிப்பெண்ணுக்குச் சிறை

1 mins read

மிட்டாய் வேண்டும் என்று கேட்ட சிறுமியை வீட்டுப் பணிப்பெண் பிடித்துத் தள்ளியதில் சிறுமியின் தலையில் ஒரு வெட்டுக் காயம் ஏற்பட்டது. குற்றத்தை நேற்று ஒப்புக்கொண்ட 29 வயது மியன்மார் நாட்டுப் பணிப்பெண் ணுக்கு ஐந்து வாரச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

தம் ஆறு வயது மகளுக்கு மிட்டாய் தரக்கூடாது என்ற முதலாளியின் சொல்லுக்குக் கட்டுப்பட்டு மிட்டாய் தர மறுத்து விட்டார் பணிப்பெண்.

ஆனால் சிறுமி தொடர்ந்து மிட்டாய் கேட்டு நச்சரித்ததுடன் பணிப்பெண்ணின் கைகளைப் பற்றிக்கொண்டு பிறாண்டிக் காயம் விளைவிக்கவும் முயற்சித் ததாகப் பணிப்பெண் கூறினார்.

இதனால் எரிச்சலடைந்த பணிப்பெண் தள்ளியதில் சிறுமி கீழே விழுந்தார். வலியில் அழுத சிறுமியைக் கண்டு கொள்ளாமல் பணிப்பெண் வீட்டுக்கூடத்தி லிருந்து சமையலறைக்குச் சென்றார். சிறுமி கோபத்துடன் அங்கு வந்து பணிப்பெண்ணை நோக்கி ஒரு பிளாஸ்டிக் கிண்ணத்தைத் தூக்கி எறிந் ததாகக் கூறப்பட்டது.

அப்போது பணிப்பெண் சிறுமி யின் தோளைப் பிடித்துத் தள்ளி யதில் சிறுமி மீண்டும் கீழே விழுந் தார். அப்போது அவரின் தலை சமையலறைக் கதவில் பட்டது. அதில் ஏற்பட்ட வெட்டுக் காயத் திலிருந்து ரத்தம் கசியத் தொடங் கியதை நிறுத்தப் பணிப்பெண் முயன்ற சமயத்தில்தான் முதலாளி வீட்டுத் தொலைபேசியில் அழைத் திருந்தார். நடந்ததை முதலாளி யிடம் பணிப்பெண் கூறியதுடன் சிறுமி உடனே மருத்துவமனைக் குக் கொண்டு செல்லப்பட்டார்.