ஹோட்டலில் தங்க இணையப்பதிவு; மோசடி செய்த ஆடவர் கைது

ஹோட்டலில் தங்க இணையப்பதிவு; மோசடி செய்த ஆடவர் கைது

1 mins read

ஹோட்டலில் தங்குவதற்கான பதிவுகளில் இணைய வர்த்தக மோசடி செய்ததன் தொடர்பில் ஆடவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கிட்டத்தட்ட 100க்கும் மேற்பட்ட இதுபோன்ற மோசடிச் சம்பவங்களில் அவர் ஈடுபட்டுள்ளார் எனச் சந்தேகிக்கப்படுகிறது. $40,000க்கும் மேற்பட்ட தொகை மோசடியில் சம்பந்தப்பட்டிருப்பதாக நம்பப்படுகிறது. 'கேரோசல்' இணையத்தளம் வழி குறைந்த விலையில் ஹோட்டல் அறை வழங்குவதாக போலி விளம்பரம் செய்த பின்னர் பயனாளர்களை வைப்புத் தொகை செலுத்தச் செய்தார் அந்த ஆடவர். இதன் தொடர்பில் இன்று அவர் மீது நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படும்.