பெண்களைக் குறிவைக்கும் 'டீப்நியூட்'

பெண்களைக் குறிவைக்கும் 'டீப்நியூட்'

1 mins read
ee257023-d72e-4c51-9385-a6d07613e681
-

ஒரு பெண் தன் படத்தைச் சமூக ஊடகத்தில் பதிவேற்றம் செய்திருந்தார். அதே படம் வேறு பாலியல் தொடர்பான இணையத்தளம் ஒன்றில் பதிவேற்றம் செய்யப்பட்டது. ஆனால் அந்தப் படத்தில் அதே பெண் ஆடைகளின்றி காணப்பட்டார்.

கடந்த ஒரே வாரத்தில் பல பெண்களின் படங்கள் சமூக ஊடகங்களிலிருந்து திருடப்பட்டு, திருத்தியமைக்கப்பட்டு பாலியல் தொடர்பிலான இணையத்தளங்களில் இவ்வாறு பதிவேற்றம் செய்யப்பட்டன. இதற்குப் பயன்படுத்தப்பட்ட செயலியின் பெயர் 'டீப்நியூட்'. சர்ச்சை எழுந்ததால் செயலியை உருவாக்கியோர் அதை மீட்டுக்கொண்ட பின்னரும், சிலர் தொடர்ந்து தவறான முறையில் செயலியைப் பயன்படுத்தி வருவதாகக் கூறப்படுகிறது.