வியட்னாமில் பிணைக்கைதியாகத் தான் சிறைப்பிடிக்கப்பட்டுள்ள தாகத் தம்பிக்குப் போலித் தகவல் அளித்த வின்சண்ட் லாவ் பூன் கியட்டுக்கு நேற்று ஐந்து மாதச் சிறைத் தண்டனை விதிக்கப் பட்டது.
வியட்னாமுக்குச் சென்றிருந்த வின்சண்ட், இவ்வாண்டு பிப்ரவரி 27ஆம் தேதியன்று தன்னுடைய கடப்பிதழ், உடைமைகள் எல்லாம் தன்னிடமிருந்து பறிக்கப்பட்டதாகவும் 15,000 அமெரிக்க டாலர் (S$20,400) தந்தால் மட்டுமே கடத்தல்காரர்கள் தன்னை விடு விப்பார்கள் என்றும் தன் தம்பி 24 வயது திரு லாவ் வெய் ஜுன்னுக்குக் குறுந்தகவல் அனுப் பினார்.
தம்பிக்கு மட்டுமல்லாமல் வின்சண்ட் தன் தாயாருக்கும் அதேபோல் குறுந்தகவல் அனுப் பினார். தாயாரும் பணம் கொடுக் கும்படி திரு லாவ்விடம் கேட்டுக் கொண்டார். அதையடுத்து திரு லாவ் $1,000ஐ அண்ணனின் வங்கிக் கணக்குக்கு மாற்றினார்.
ஆனால் வின்சண்ணுடன் அதன் பின்னர் தொடர்புகொள்ள முடியாத நிலையில் தம்பி அதிகாரிகளுக்குத் தகவல் தெரி வித்தார்.
உடனே சிங்கப்பூர் போலிஸ் படையைச் சேர்ந்த கிட்டத்தட்ட 50 காவலர்கள் வின்சண்ட்டை மீட்கும் பணியில் இறங்கியதுடன் அனைத்துலக குற்ற ஒழிப்புக் குழுவின் வியட்னாம் பிரிவு அதி காரிகளுக்கும் தகவல் அளிக்கப் பட்டது.
வியட்னாமில் வின்சண்ட் இருக்கும் இடத்தைக் கண்டு பிடிக்க வியட்னாம் அதிகாரிகளின் உதவி நாடப்பட்டது. புலன் விசாரணை மேற்கொள்ளப்பட்ட தற்கு இடையேயும் வின்சண்ட் தொடர்ந்து மூன்று நாட்களுக்குத் தன் குடும்ப உறுப்பினர்களுக்குக் பொய்த் தகவல் தாங்கிய குறுஞ் செய்திகளை அனுப்பி வந்தார்.
பணம் கிடைக்காவிட்டால், கடத்தியவர்கள் தன் கைவிரல் களைத் துண்டித்துவிடுவார்கள் என்றும் தன்னைக் கொன்றுவிடு வார்கள் என்றும் கூறி மிரட்டு வதாக வின்சண்ட் இக்குறுந் தகவல்களில் குறிப்பிட்டிருந்தார்.
ஆனால் வின்சண்ட் கூறியது பொய் என்று பின்னர் இரு நாட்டு அதிகாரிகளும் விசாரணை மூலம் கண்டறிந்தனர். மார்ச் 20ஆம் தேதியன்று வின்சண்ட் சிங்கப்பூர் திரும்பியபோது அதிகாரிகளின் பிடியில் சிக்கினார்.
தம்பியை ஏமாற்றியதன் தொடர்பிலான குற்றச்சாட்டை ஒப்புக்கொண்ட வின்சண்ணுக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட் டது. தம்பியிடமிருந்து பெற்றுக் கொண்ட மொத்த தொகையையும் லாவ் திரும்பக் கொடுத்துவிட்ட தாக அறியப்படுகிறது.
கடனை அடைக்கப் பணம் தேவைப்பட்டதால் வின்சண்ட் இந்த மோசடியில் ஈடுபட்டதாக நேற்று நீதிமன்றத்தில் கூறப்பட் டது. மோசடி குற்றத்திற்காக வின்சண்ணுக்கு பத்தாண்டுகள் வரை சிறைத் தண்டனையும் அபராதமும் விதிக்கப்பட்டிருக்கலாம்.

