பலர் அறிந்திடாத கிருமிக்கு சமைக்காத மீன் காரணம்

பலர் அறிந்திடாத கிருமிக்கு சமைக்காத மீன் காரணம்

1 mins read

சமைக்காத மீன் உணவைச் சாப்பிட்ட 160க்கும் மேற்பட் டோருக்குக் காய்ச்சல், மூட்டு பாதிப்பு, மூளைக்காய்ச்சல் போன்ற பாதிப்புகள் 2015ஆம் ஆண்டில் ஏற்பட்டிருந்தன. 'குருப் பி ஸ்ட்ரெப்டொகொக்கஸ்' (ஜிபிஎஸ்) கிருமியின் அதிகம் அறிந்திடாத ஒரு வகை கிருமித் தொற்றால் இப்பாதிப்பு ஏற்பட்ட தாக டான் டோக் செங் மருத்துவ மனையைச் சேர்ந்த ஆய்வாளர்கள் இப்போது கண்டுபிடித்துள்ளனர்.

மனிதர்களும் மீன்களும் இவ்வகை கிருமியால் கிட்டத்தட்ட இருபது ஆண்டுகளுக்கும் மேலாகவே பாதிக்கப்பட்டு வரு வது தெரியவந்துள்ளது.

இத்தகைய தொற்று சம்பவங் கள் லாவோஸ், தாய்லாந்து, வியட்னாம், சிங்கப்பூர் போன்ற நாடுகளில் 1995ஆம் ஆண்டு முதலே இருந்து வருவதாக ஆய்வு முடிவுகள் கூறுகின்றன.

இதற்கு முன் கண்டுபிடிக்கப் படாமல் இருந்த இவ்வகை கிருமி, 2007ஆம் ஆண்டுக்கும் 2016ஆம் ஆண்டுக்கும் இடைப் பட்ட காலத்தில் மலேசியா, வியட்னாம் ஆகிய நாடுகளில் இருந்த 14 மீன் பண்ணைகளில் இருந்த 'டிலாபியா' மீன்வகையைப் பாதித் திருந்தது.

இதற்கிடையே 2015 ஆம் ஆண்டில் 'டிலாபியா' மீன் உட்பட ஏழு வகை மீன்களைச் சாப்பிட்ட தன் தொடர்பில் சிங்கப்பூரில் பலர் பாதிப்புக்குள்ளாகினர்.

இச்சம்பவத்தைத் தொடர்ந்து உணவங்காடிக் கடைகள் சமைக்காத மீன் உணவை விற்பதை அரசாங்கம் தடைசெய்தது.