உளவியல் ரீதியாக உதவும் ‘ஹார்ட்’ குழு

பயங்கரவாதத் தாக்குதல் சம் பவத்தை அடுத்து ஏற்படும் பாதிப் புகளைச் சமாளிக்கவும் உளவியல் ரீதியாக உதவி அளிக்கவும் புதிய ஆதரவுக் குழு ஒன்று அமைக்கப் படுகிறது.

அவசரகால உதவி மற்றும் நடவடிக்கை அமைப்பு (ஹார்ட்) என்ற இப்புதிய குழுவின்கீழ், உள்துறைக் குழு, சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சு, மன நல மருத்துவமனை ஆகியவற்றைச் சேர்ந்த மருத்துவ நிபுணர்களுடன் மருத்துவமனைகளும் பலதுறை மருந்தகங்களும் தங்களின் வளங் களை ஒருங்கிணைத்துத் தகவல்களையும் நிபுணத்துவத்தையும் பகிர்ந்துகொள்ளும்.

நேற்று காலை இடம்பெற்ற நான்காவது ஆசிய குற்றவியல் மற்றும் நடவடிக்கைகள் உளவியல் மாநாட்டைத் தொடங்கி வைத்துப் பேசிய உள்துறை இரண்டாம் அமைச்சரும் மனிதவள அமைச் சருமான ஜோசஃபின் டியோ புதிய குழு குறித்து அறிவித்தார்.

ஒரு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் நடந்த பின்னர், அதனால் உளவியல் ரீதியாகப் பாதிப்பு ஏற்படும். பாதிக்கப்பட்ட சமூகம் அதிலிருந்து மீண்டு வருவது மிக முக்கியம் என்று வலியுறுத்திய திருமதி டியோ, ஏப்ரல் மாதத்தில் நடந்த இலங்கைத் தாக்குதலை உதாரணம் காட்டினார்.

பயங்கரவாதத் தாக்குதல்களை அடுத்து இலங்கை மக்கள் பலரைப் பதற்றமும் விரக்தியும் ஆட்கொண்டன. மீண்டும் தங் களின் வாழ்க்கை பழையபடி திரும்புமா என்ற அச்சம் அவர் களிடையே நிலவி வந்ததை உள வியல் நிபுணர்கள் கவனித்தனர்.

இதுபோன்ற தாக்குதல் நடக் கும்போது, உயிரிழப்பும் சொத்துச் சேதமும் அதிர்ச்சியை அளிக்கக் கூடியதாக அமையும். ஆனால் இதைவிட நம்பிக்கையை இழப்பதே ஒருவருக்கு அதிகப் பாதிப்பை ஏற்படுத்தும் என்றார் அமைச்சர்.

“தாக்குதலை முறியடிக்கும் திறனை மட்டும் நாம் பெற்றிருப்பது போதாது. பயங்கரவாதத் தாக் குதலுக்குப் பின் அதிலிருந்து உளவியல் ரீதியாக மீண்டுவர சமூகத்தினரைத் தயார் செய்வதும் மிக முக்கியம்,” என்றார் திருமதி டியோ.

ஒரு பெரிய நெருக்கடியைத் தொடர்ந்து அரசு எடுக்கவுள்ள பதில் நடவடிக்கை ஒருங்கிணைந் ததாகவும் சுமுகமாகவும் இருப் பதை ‘ஹார்ட்’ குழு உறுதிசெய்யும் என்று உள்துறை அமைச்சின் தலைமை உளவியல் நிபுணர் டாக்டர் மஜீத் காதர் தெரிவித்தார்.

மருத்துவ நிலையங்கள் உள வியல் பாதிப்புகளுடன் வரும் நோயாளிகளுக்குத் தகுந்த உதவியை அளிக்கும் வகையில் இருக்க புதிய ‘ஹார்ட்’ குழு செயல்படும்.

2019-07-11 06:00:00 +0800

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!