பருவநிலை மாற்றம்: சிங்கப்பூரும் மோசமாக பாதிக்கப்படலாம்

2050ஆம் ஆண்டுக்குள் சிங்கப்பூர் போன்ற வெப்பமண்டல நாடு, வழக்கத்திற்கு மாறான பருவநிலை மாற்றங்களால் பாதிக்கப்பட்டு வறண்ட பூமியாக மாறலாம் என்று நேற்று முன்தினம் வெளியிடப்பட்ட ஓர் ஆய்வின் முடிவு கூறுகிறது.

‘இடிஹெஜ் சூரிக்’ பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் மேற்கொண்ட இந்த ஆய்வு பற்றிய விவரங்கள் புதன்கிழமையன்று ஓர் அறிவியல் பத்திரிகையில் வெளியிடப்பட்டது.

வெப்பமண்டலப் பகுதியைச் சார்ந்த சிங்கப்பூருடன் கோலாலம் பூரும் ஜகார்த்தாவும் அதேபோல் பெருமளவில் பாதிப்புறும் என்றும் ஆய்வில் முன்னுரைக்கப்பட்டு உள்ளது. ஸ்பெயினின் மட்ரிட் போல லண்டனின் பருவநிலையும் ஆஸ்திரேலியாவின் கேன்பராவைப் போன்று பாரிசின் பருவநிலையும் மாற்றம் காணும் என்றும் குறிப் பிட்ட ஆய்வு, நம்பிக்கை தரக்கூடிய ஒரு கணிப்பாக இருக்கும் என்ற எதிர்பார்ப்புடன் மேற்கொள்ளப் பட்டது.

உலகின் 520 முக்கிய நகரங் கள் இந்த ஆய்வுக்காகத் தேர்ந் தெடுக்கப்பட்டன. பசுமைத் திட்டங் கள் நடைமுறைப்படுத்தப்பட்ட பட் சத்தில் எதிர்காலம் குறித்துக் கணிப்புகள் செய்யப்பட்டன. ஆனால் முடிவுகள் பாதகமாகவே அமைந்தன.

தற்போது வடதுருவத்திலுள்ள சில நகரங்கள், 2050ல் 1000 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள தெற்குப் பகுதியைப் போல் ஆகிவிடும் என்று ஆய்வு முடிவுகள் தெரிவித்துள்ளன.

பூமியின் நில நடுக்கோட்டருகே உள்ள நகரங்களின் வெப்பநிலை அவ்வளவாக மாற்றம் காணாவிட் டாலும் வறட்சியோ கனமழையோ ஏற்படும் சாத்தியம் அதிகமாக இருக்கும் என்றும் முன்னுரைக்கப் பட்டுள்ளது.

மொத்தத்தில் உலகில் கிட்டத் தட்ட 77 விழுக்காட்டுப் பகுதி யிலுள்ள பருவநிலை, குறிப்பிடத் தக்க மாற்றம் காணும். அத்துடன் 22 விழுக்காடு இதற்குமுன் அனு பவித்திராத சூழலுக்கு உட்படுத் தப்படும். ஐரோப்பாவில் கோடைக் காலமும் குளிர்காலமும் மேலும் வெதுவெதுப்பாகும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

“பருவநிலை மாற்றம் குறித்து என்ன நடக்கிறது என்பதை அனைவரும் உணர்வதற்கு இந்த ஆய்வு கைகொடுக்கிறது. மனித னின் நடவடிக்கைகள் பருவநிலை மாற்றத்தை ஏற்படுத்தி வருகின் றன. இதை 30 ஆண்டுகளுக்கு மேலாக நாம் உணர்ந்திருந்தாலும் அனைத்துலக ரீதியில் நாம் செயல்படத் தவறிவிட்டோம்,” என் றார் ஆய்வுக் குழுவின் தலைவர் பாஸ்டின்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!