உடற்குறையுள்ளோருக்கும் கட் டடத்தின் அனைத்து வசதிகள் ஏதுவாக அமையவேண்டும் என் பதன் தொடர்பில் புதிய விதிமுறை களைக் கட்டட, கட்டுமான ஆணையம் (பிசிஏ) அடுத்த ஆண்டுமுதல் நடைமுறைப்படுத்த உள்ளது. ஜனவரி ஆறாம் தேதி முதல் புதிய கட்டடங்களும் பெருமளவில் சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்படும் கட்டடங்களும் இப்புதிய விதிமுறைகளுக்கு உட் படுத்தப்படும்.
உடற்குறையுள்ளோருக்கு மட்டுமன்றி மூத்த குடிமக்களுக் கும் அவர்களின் பராமரிப்பாளர் களுக்கும் ஏற்ற வகையில் கட் டடங்களில் உள்ள உடை மாற்றும் அறைகளும் கழிவறைகளும் கூடு தல் வசதிபட அமையவேண்டும்.
கட்டடச் சூழலின் நடமாட்டத் தன்மை குறியீட்டில் இம்மாதம் ஐந்தாம் தேதியன்று பிசிஏ செய்த மாற்றத்தின்கீழ் இப்புதிய விதி முறைகள் நடப்புக்கு வரவுள்ளன.
இதன்படி இரு முக்கிய மாற் றங்கள் செயல்படுத்தப்படும்.
உடை மாற்றும் அறைகள் இனி உடற்குறையுள்ளோருக்கும் பராமரிப்பாளர் உதவி தேவைப் படும் முதியவர்களுக்கும் ஏற்ற வகையில் அமையவேண்டும். இதுபோன்ற விதிகள் இதற்கு முன் இருந்ததில்லை.
அடுத்து, ஒவ்வொரு மாடி யிலும் அமைந்திருக்கும் கழி வறைகள் அளவில் பெரியதாய் அமைந்திருத்தல் அவசியம்.
இதனால் இயந்திர சக்கர நாற்காலிகள் எளிதாக இங்கும் அங்கும் நகர முடியும்.
சுகாதாரப் பராமரிப்பு நிலை யங்கள், பேருந்து நிலையம் போன்ற முக்கிய போக்குவரத்து இடங்கள், பேரங்காடிகள், கற் றல் நிலையங்கள் என அனைத் திலும் இத்தகைய வசதிகள் இனி கட்டுமானத்தின்போதே அமையவேண்டும்.
உடற்குறையுள்ளோர், மூத்த குடிமக்கள் ஆகியோரின் தேவைகளைக் கருத்தில் கொண்டு இப்புதிய விதிமுறை களை வகுத்ததாக சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சர் டெஸ்மண்ட் லீ, நேற்று முன் தினம் தமது ஃபேஸ்புக்கில் பதிவிட்டார்.
"முன்பைவிட கூடுதல் வசதி கள் கொண்டதாக சிங்கப்பூர் இன்று இருந்தாலும் இதற்கு மேலும் வசதிகள் செய்து கொடுக் கப்படலாம்," என்றார் அவர்.
விதிமுறைகள் நடப்புக்கு வருவதால் இனி கட்டடங்களின் வசதிகள் பலர் சந்தித்து வரும் சிரமங்களைக் களைய உதவும்.
சக்கர நாற்காலியில் உள்ள ஒரு முதியவரும் அவரின் பராமரிப்பாளரும் தற்போதுள்ள சில கட்டடங்களின் கழிவறை களுக்குச் செல்லும்போது இட நெருக்கடி ஏற்படுகிறது.
சக்கர நாற்காலியே இடத்தை அடைத்துக்கொண்டு இருப்ப தால் அதிலுள்ள முதியவர் கழிவறை யைப் பயன்படுத்தப் பராமரிப் பாளருக்கு அதிகச் சிரமம் ஏற் படும். அது மட்டுமல்லாமல் பராமரிப்பாளருக்குக் களைப்பும் ஏற்பட்டுவிடும். தினசரி வாழ்க் கையில் ஏற்படுகின்ற சவால்களைச் சமாளிக்கும் வகையில் இனிப் புதிய விதிமுறைகளின்படி அமைய உள்ள கட்டட வசதிகள் பேராதர வாக அமையும்.

