எதிர்கால சவால்களைச் சமாளிக்க உதவ 'மூப்படையும் சமூக அமைச்சு' என்ற ஒரு புதிய அமைச்சு தேவை என்று அறிக்கை ஒன்று யோசனை கூறியிருக்கிறது.
அத்தகைய ஓர் அமைச்சு மனிதவள மற்றும் கல்வி அமைச் சோடு அணுக்கமாக ஒன்று சேர்ந்து செயல்பட்டால் அதிகாரி கள் புதிய சவால்களுக்குத் தீர்வு காண உதவி கிடைக்கும் என்று அறிக்கை தெரிவிக்கிறது.
தானியக்கம் காரணமாக பட்டத்தொழிலர்கள், நிர்வாகிகள், மேலாளர்கள், தொழில்நுட்பர்கள் வேலை இழப்பது போன்ற சவால் களை அத்தகைய தீர்வுகளைக் கொண்டு சமாளிக்கலாம் என்று அந்த அறிக்கை கூறுகிறது.
குறிப்பாக புதிய அமைச்சில் ஒரு தனிப்பிரிவு இருக்க வேண் டும். அது வேலை நியமனத்தில் வயது மூப்பு பற்றிய பிரச்சினை யில் கவனம் செலுத்த வேண்டும் என்று எதிர்கால வேலை அணி பற்றிய அந்த அறிக்கை கூறுகிறது.
கொள்கை ஆய்வுக் கழகத்தின் மூத்த ஆய்வாளர் ஃபைசல் யஹ்யா அந்த அறிக்கையை உரு வாக்கி இருக்கிறார்.
பொருளியல் நவீனமயம் காரணமாக ஏற்படக்கூடிய சவால் கள் பற்றியும் ஊழியர்களைத் தக்க வைத்துக்கொள்ள சிங்கப்பூர் கைக்கொள்ளும் உத்திகள் குறித் தும் குறிப்பிட்டு இருக்கும் டாக்டர் ஃபைசல், மனிதவளம் முதல் சுகா தாரப் பராமரிப்பு வரை பலதரப்பட்ட அக்கறைக்குரிய அம்சங்களையும் உள்ளடக்க மூப்படையும் சமூக அமைச்சு ஒன்று தேவைப்படக் கூடும் என்று தெரிவித்துள்ளார்.
ஆய்வு பல்கலைக்கழகங்களின் கட்டமைப்பான 'பசிபிக் வட்டார பல்கலைக்கழகங்கள் சங்கம்' என்ற அமைப்பு, பெரிய அளவிலான ஆய்வுத் தொகுப்புகளை உரு வாக்கி வருகிறது. இந்த அறிக்கை அந்தத் தொகுப்பின் ஒரு பகுதி யாக நேற்று வெளியிடப்பட்டது.
சிங்கப்பூர் ஊழியர் அணி மூப் படைந்து வருகிறது. மொத்த கரு வள விகிதமும் குறைவாக இருக் கிறது. வெளிநாட்டு ஊழியர்கள் சிங்கப்பூர் வருவதற்கு அதிக கட்டுப்பாடுகள் இருக்கின்றன. இவை காரணமாக சிங்கப்பூரில் ஊழியர்கள் கிடைப்பது சிரமமாக இருக்கிறது என்று டாக்டர் ஃபைசல் குறிப்பிட்டு உள்ளார்.
கல்வி பற்றி குறிப்பிட்டுள்ள டாக்டர் ஃபைசல், தொழில்துறை களுக்கும் உயர்கல்வி நிலை யங்களும் இடையில் இருக்கும் தொடர்புகள் இன்னும் பலப்படுத் தப்பட வேண்டும் என்று தெரிவித் துள்ளார்.
தொடர்பு தகவல் அமைச்சு, ஒரு பிரிவை உருவாக்க வேண்டும் என்றும் அந்தப் பிரிவு மனித வளம் மற்றும் கல்வி அமைச்சுடன் மட்டுமின்றி புதிய மூப்படையும் சமூக அமைச்சுடன் சேர்ந்து செயல்பட்டு தகவல் தொடர்புத் துறைக்குத் தேவைப்படும் மனித மூலதனத்தைப் பெருக்க வேண்டும் என்றும் அவர் பரிந்துரைத்து உள்ளார்.
ஊழியர் அணி மூப்படைகிறது. கருவள விகிதம் குறைந்து இருக்கிறது. வெளிநாட்டு ஊழியர்கள் வருவதற்கு கடுமையான கட்டுப்பாடுகள் நடப்பில் உள்ளன. இவையே ஊழியர் பற்றாக் குறைக்குக் காரணங்கள் என்று ஆய்வு தெரிவிக்கிறது.

