கடப்பிதழைக் காட்ட மறந்த சிங்கப்பூரருக்கு 2,500 ரிங்கிட் அபராதம்

மலேசியாவைவிட்டு வெளியேறியபோது தனது கடப்பிதழைக் காட்டத் தவறிய சிங்கப்பூரருக்கு  ஜோகூர் நீதிமன்றம் 2,500 ரிங்கிட் (820 வெள்ளி) அபராதத்தை விதித்தது. “என்னை மன்னித்துவிடுங்கள்.  போதிய ஓய்வில்லாததால் களைப்பில்  நான் என் கடப்பிதழைக் காண்பிக்கத் தவறினேன்,” என்று 27 வயது முகமது அல்ஃபலா அமர்வு நீதிமன்றத்தில் தெரிவித்தார். ஜூன் மாதம் 25ஆம் தேதி, இரண்டாம் இணைப்புப் பாலத்தில் இருக்கும் சுல்தான் அபு பக்கார் குடிநுழைவு சோதனைச் சாவடியில் இந்தச் சம்பவம் நேர்ந்தது.

குடிநுழைவுக் குற்றங்கள் தொடர்பில் அபராதம் அல்லது சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட நான்கு சிங்கப்பூரர்களில் அவரும் ஒருவர்.

மற்ற சம்பவங்களில், மலேசியாவில் அனுமதிக்கப்பட்ட கால வரம்புமீறி தங்கிய தம்பதியரால் அபராதம் கட்ட முடியாததால் அவர்களுக்குச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

மலேசியாவில் கால வரம்புமீறி 55 நாட்களுக்குத் தங்கியிருந்த 37 வயது  வர்த்தகர் ஸ்டேன்லி நியோவுக்கு 10,000 ரிங்கிட் அபராதம் விதிக்கப்பட்டது.