குற்றச்செயலை கண்டறியும் ஆற்றல் மேம்பட புது முயற்சி

குற்றச்செயலை கண்டறியும் ஆற்றல் மேம்பட புது முயற்சி

2 mins read

குற்றச்சாட்டுகளை விரைவாக கண்டுபிடிக்க வகைசெய்யும் புதிய தொழில்நுட்பம் ஒன்றின் தொடர் பில் சிங்கப்பூர் போலிசும் ஓசிபிசி வங்கியும் சேர்ந்து செயல்பட்டு வருகின்றன.

அந்தத் தானியங்கி தகவல் மீட்பு தொழில்நுட்பம் காரணமாக குற்றச் செயல்களைக் கண்டுபிடிப் பதற்கான காலஅளவு மிகவும் குறைந்துவிடும். போலிசுக்கும் ஓசிபிசி வங்கிக்கும் இடைப்பட்ட இந்த ஒத்துழைப்புத் திட்டத்துக்கு 'புரோஜெக்ட் போயட்' (Project Poet) என்று பெயர்.

இந்தத் தொழில்நுட்பம் மூலம் இந்த வங்கிக்கும் போலிசுக்கும் இடையில் வங்கித் தகவல்கள் முறையாக தடைபடாமல் விரைவில் தெரிவிக்கப்படும்.

நிதித்துறையில் இடம்பெறக் கூடிய குற்றச்செயல்களுக்கு மிகவும் செம்மையான முறையில் தீர்வுகாண இந்தத் தொழில்நுட்பம் இதன் மூலம் உதவும்.

உள்துறை அமைச்சில் துணைச் செயலாளராக (அனைத்துலக மற் றும் பயிற்சிப் பிரிவு) இருக்கும் டி. ராஜ குமார் நேற்று இதனை அறி வித்தார். சிங்கப்பூரில் உள்ள வங்கிகள் சங்கம் ஏற்பாட்டில் நடக்கும் இரு நாள் நிதித்துறை குற்றச் செயல்கள் ஆய்வரங்கு நேற்று தொடங்கியது.

அந்த நிகழ்ச்சியில் டி. ராஜ குமார் உரையாற்றினார். வங்கித் தகவல்களைப் பெறும் நடைமுறை முன்பெல்லாம் ஊழியர்களைக் கொண்டே பெரும்பாலும் மேற் கொள்ளப்பட்டது என்பதை போலிசும் ஓசிபிசி வங்கியும் நேற்று அறிக்கை ஒன்றில் சுட்டின.

அந்த நடைமுறைக்கு ஊழியர் கள் அதிகம் தேவைப்பட்டார்கள். அதுவும் ஏராளமான தகவல்கள் தேவைப்படும்போது அதிக எண் ணிக்கையிலான ஊழியர்களைப் பணியில் அமர்த்த வேண்டும் என் பதை கூட்டறிக்கை சுட்டியது.

ஆனால் புதிய 'புரோஜெக்ட் போயட்' தொழில்நுட்பம் காரண மாக தகவல்களை ஒன்று அல்லது இரண்டே நாட்களுக்குள் பெற்று விடலாம். முன்பு இதற்கு 10 நாட் கள் முதல் மூன்று மாத காலமாகும்.

இது மட்டுமின்றி, இந்தப் புதிய தொழில்நுட்பம் காரணமாக கள்ளப்பண விவகாரங்களைத் திறம்பட கையாளக்கூடிய சிங்கப் பூரின் ஆற்றலும் அதிகரிக்கும் என்று கூட்டறிக்கை தெரிவித்தது.

தொழில்நுட்பத்தைப் பயன்படுத் திக் கொள்ளவேண்டிய அவசியம் பற்றி விளக்கிய திரு குமார், பயங்கரவாதிகளும் குற்றவாளி களும் அதிநவீனமாகச் செயல்படு கிறார்கள் என்பதால் அவர்களின் சதிகளை, சூழ்ச்சிகளைக் கண்டு பிடிக்க புதிய தொழில்நுட்பங்கள் தேவைப்படுகின்றன என்று குறிப் பிட்டார்.

நிகழ்ச்சியில் பேசிய ஓசிபிசி வங்கியின் சட்டத்துறை அமைப் பின் தலைவர் லோரெட்டா யுவென், சட்ட அமலாக்க அமைப்புகள் தங் கள் பணியை வேகமாகவும் சிறந்த முறையிலும் ஆற்றுவதற்கு உதவும் வகையிலும் ஓசிபிசி வங்கி ஒத்துழைத்து வருவதாகத் தெரி வித்தார்.