மியன்மார் அரசுக்கு எதிராக போராடும் ஆயுத பாணி கலவரக் கும்பல் ஆதரவாளர்கள் ஆறு பேர் சிங்கப்பூரில் கைது

மியன்மார் அரசுக்கு எதிராக போராடும் ஆயுத பாணி கலவரக் கும்பல் ஆதரவாளர்கள் ஆறு பேர் சிங்கப்பூரில் கைது

2 mins read
f4547e60-90e0-4b86-bb6e-d0b57860c5e6
யூடியூபில் உள்ள 'அரக்கான் ராணுவம்' பற்றிய காணொளியில் ஒரு காட்சி. படம்: ரேடியோ ஃப்ரீ ஏசியா, யூடியுப் -

மியன்மாரில் அரசாங்கத்துக்கு எதிராக நடக்கும் ஆயுதம் ஏந்திய போராட்டத்துக்கு ஆதரவு திரட்ட சிங்கப்பூரை பயன்படுத்திய மியன் மார் நாட்டைச் சேர்ந்த ஒரு குழுவை உள்துறை அமைச்சு கைது செய்து இருக்கிறது.

மியன்மாரில் வன்செயல் தாக் குதல்களை அரங்கேற்றி வரும் 'அரக்கான் ராணுவம்' (AA) என்ற ஆயுதபாணி குழுவுக்கு ஆதரவாக அந்த நபர்களின் செயல்கள் இருந் தன என்றும் அந்தச் செயல்கள் சிங்கப்பூரின் பாதுகாப்புக்கு பாதக மானவை என்றும் உள்துறை அமைச்சு அறிக்கை தெரிவித்தது.

பாதுகாப்புக்கு ஆபத்தை ஏற் படுத்தக் கூடிய நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள அந்த நபர்கள் திருப்பி அனுப்பப்படுவார்கள் என் றும் அமைச்சு கூறியது.

'அரக்கான் சங்கம் (சிங்கப்பூர்)' என்ற அமைப்பைச் சேர்ந்த ஆறு பேர் பிடிபட்டுள்ளதாகவும் அவர் களின் கணினிகளும் கைபேசி களும் பறிமுதல் செய்யப்பட்டு இருப்பதாகவும் மியன்மாரில் ஊட கங்களில் தகவல் வெளியானது.

அதைத் தொடர்ந்து அமைச்சின் அறிக்கை இடம்பெற்றது.

மியன்மாரில் ராக்கைன் மற்றும் சின் என்ற மாநிலங்களுக்கு அதிக தன்னாட்சி உரிமை கேட்டு அரக்கான் ராணுவம், மியன்மார் ராணுவத்தை எதிர்த்து போராடி வருகிறது.

2009 ஏப்ரல் மாதம் தோற்றுவிக் கப்பட்ட அரக்கான் ராணுவத்தை ஒரு பயங்கரவாத அமைப்பு என்று மியன்மார் அரசாங்கம் வகைப் படுத்தி இருக்கிறது.

சிங்கப்பூரில் பிடிபட்ட மியன்மார் நபர்கள், இங்குள்ள மியன்மார் நாட்டினர் சிலரை ஒன்று திரட்டி அரக்கான் ராணுவத்திற்கும் யுஎல்ஏ என்ற அந்த ராணுவத்தின் அரசியல் பிரிவுக்கும் ஆதரவு திரட்டி இருக்கிறார்கள் என்பது புலன்விசாரணை மூலம் தெரிய வந்துள்ளதாக அமைச்சு கூறியது.

எத்தனை பேர் விசாரிக்கப்பட்டு வருகிறார்கள் என்பதை அமைச்சு தெரிவிக்கவில்லை. இருந்தாலும் ஆறு பேர் சிங்கப்பூரில் கைதாகி இருக்கிறார்கள் என்று 'இர்ரவாடி' என்ற மியன்மாரின் செய்தித்தளம் தெரிவித்துள்ளது.

சிங்கப்பூரின் தேசிய பாதுகாப் புக்குப் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய இத்தகைய காரியங்களில் ஈடுபடும் யாரும் கடுமையான நடவடிக் கைகளுக்கு ஆளாவார்கள் என்று அமைச்சு எச்சரித்து இருக்கிறது.

சிங்கப்பூரில் வசிக்கின்ற அல்லது வேலை பார்க்கின்ற வெளி நாட்டினர் உள்நாட்டுச் சட்டங்களை மதித்து நடக்க வேண்டும் என்று அமைச்சு வலியுறுத்தியது.