தெம்பனீஸ் வீட்டிலிருந்து 1,000 வெள்ளி திருட்டு

தெம்பனீஸ் அடுக்குமாடி வீட்டிலிருந்து 1,000 வெள்ளி பணத்தைத் திருடியதன் பேரில் 13 வயது இளையர் கைது செய்யப்பட்டிருக்கிறார். தெம்பனீஸ் ஸ்திரீட் 24லுள்ள அந்த வீட்டிலிருந்து அந்தப் பணம் காணாமல் போனதாக போலிசாருக்கு  இன்று காலை 6.30 மணிக்குத் தகவல் கிடைத்தது.

பிடோக் போலிஸ் பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள் விசாரணைகள் மூலம் சந்தேக நபரைக் கண்டுபிடித்து அவரைக் கைது செய்தனர்.  வீவக பொது நடைவழி நெடுகில் உள்ள வீட்டுச் சன்னல் வழியாகச் சந்தேக நபர் அந்தப் பணத்தைத் திருடியதாகக் கூறப்படுகிறது.

தங்குமிடத்திலிருந்து திருடும் குற்றத்திற்கு ஏழு ஆண்டு வரையிலான சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்.