பங்காளித்துவம் முதல் தலைமைத்துவம் வரை

சிங்கப்பூரில் உள்ள பொது வீட மைப்புப் பேட்டைகள் பசுமை மற்றும் திறந்தவெளிகளில் கட்டப்பட்டுள்ளன. ஆகவே, அனைவரும் அங்கு செல்ல முடியும்.

சமூக வசதிகள் மக்களின் வீடுகளுக்கு அருகிலேயே அமைந்துள்ளதால், வெவ்வேறு பின்னணிகளைக் கொண்ட மக்கள் ஒருவரோடு ஒருவர் பழக ஏதுவாக இருக்கும் என்று தேசிய வளர்ச்சி அமைச்சர் லாரன்ஸ் வோங் தெரிவித்துள்ளார்.

நகர சுற்றுப்புறத்தைக் கொண்டு மக்களிடையே சமூக மூலதனத்தையும் நம்பிக்கையையும் சிங்கப்பூர் வளர்த்துள்ளது என்று திரு வோங் எடுத்துரைத்தார்.

"இனம் மற்றும் வருமானம் ஆகியவற்றால் பிரிவினை ஏற்பட்டு விடக்கூடாது என்பதில் நாங்கள் கவனமாக இருக்கிறோம்.

"ஆக, வெவ்வேறு பின்னணிகளைக் கொண்ட அக்கம்பக்கத்தார், இன, வருமான பாகுபாடின்றி அருகருகே வாழ்கிறார்கள். அது சமூகப் பிணைப்பை வலுவாக்கு கிறது." என்று திரு வோங் விவரித்தார்.

கொலம்பியாவின் மெடலின் நகரில் நடைபெறும் 10வது உலக நகரங்கள் உச்சநிலைக் கூட்டத்தின் மேயர்கள் கருத்தரங்கில் திரு வோங், 'அதிக நம்பிக்கை உள்ள நகரத்தை உருவாக்குதல்' எனும் தலைப்பில் பேசினார்.

மக்களிடையே நம்பிக்கையை வலுவாக்குவதைத் தவிர, திரு வோங், அதிக நம்பிக்கையுடைய நகரம், நீதி மற்றும் சட்டத்தின் ஆட்சி, சமூகத்தில் நியாயத்தன்மை, பங்காளித்துவம் மற்றும் தலைமைத்துவம் ஆகியவற்றை வளர்ப்பதில் நான்கு முக்கிய கூறுகளை எடுத்துரைத்தார்.

"சமூகம் நியாயமாக நடந்து கொள்கிறது என்று மக்களுக்கு நம்பிக்கை ஏற்பட நல்ல ஆளுமை யும் கொள்கைகளும் அவசியம்.

"அனைவரும் மேம்பட்டு, சிறந்த நிலையைப் பெற வாய்ப்புகள் கொடுக்கப்பட வேண்டும்.

"கல்வி என்பது பள்ளி நாட் களில் மட்டும் வழங்கப்படுவது அல்ல. அது பள்ளிக்கு முந்திய நிலையிலும் தொடர் கல்வியிலும் வழங்கப்பட வேண்டும்.

"இது ஒவ்வொரு குழந்தைக்கும் நல்லதொரு தொடக்கத்தைக் கொடுக்கும். வயது ஆக ஆக, தங்கள் வேலைக்கு அவர்கள் தேவைப்படுபவர்களாகத் திகழ உதவும்," என்றும் அமைச்சர் வோங் வலியுறுத்தினார்.

பொதுத்துறை-தனியார் துறை பங்காளித்துவமும் நீண்டகால சிந்தனையும் முக்கியம் என்றும் திரு வோங் சொன்னார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!