மாற்றியமைக்கப்பட்ட மின்ஸ்கூட்டர் மணிக்கு 150 கி.மீ. வேகத்தில் சென்றது

மாற்றியமைக்கப்பட்ட மின்ஸ்கூட்டர் மணிக்கு 150 கி.மீ. வேகத்தில் சென்றது

1 mins read

மாற்றியமைக்கப்பட்ட மின்ஸ்கூட்டர் ஒன்று, தானா மேரா கோஸ்ட் சாலையில் ஓர் இரவில் மணிக்கு 150 கிலோ மீட்டர் வேகத்தில் சென்றது ஒரு காணொளி (படம்) மூலம் கண்ட றியப்பட்டுள்ளது.

இம்மாதம் 8ஆம் தேதி ஃபேஸ்புக், யுடியூப், இஸ்டகிராம் ஆகிய சமூக வலைத்தளங்கில் அந்தக் காணொளியைத் தனிநபர் நடமாட்டச் சாதனங்களை மாற்றியமைக்கும் நிறுவனமான 'ட்யூன் எக்ஸ்டிரீம்' பதிவேற்றம் செய்தது.

தவறிழைக்கும் தனிநபர் நடமாட்டச் சாதனப் பயனாளர் களுக்கு எதிராக சம்பந்தப்பட்ட அமைப்புகள் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்திருந்தாலும் சட்டத்துக்கு விரோதமாக அச்சாதனங்களில் மாற்றங்களைச் செய்யும் நிறுவனங்கள் ஆங்காங்கே செயல்பட்டு வருகின்றன என்று சில்லறை விற்பனையாளர்கள் தெரிவித்தனர்.

இதுகுறித்து நேற்று முன்தினம் ஃபேஸ்புக்கில் கருத்து தெரிவித்த நிலப் போக்குவரத்து ஆணையம், "இவ்வாண் டின் முற்பாதியில் 1,700 உந்து நடமாட்டக் குற்றங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. அவற்றில் மூன்றில் ஒரு பகுதி விதிமுறைகளுக்கு உட்படாத சாதனங்களைப் பயன்படுத்தியது தொடர்பானவை," என்று தெரிவித்தது.

உந்து நடமாட்டச் சட்டத்தின்படி, தனிநபர் நடமாட்டச் சாதனங்களின் எடை 20 கிலோ கிராமுக்கு மேற்போகாம லும் குறுக்களவு 70 செண்டிமீட்டருக்கு மேற்போகாமலும் இருக்க வேண்டும். அது மணிக்கு 25 கிலோ மீட்டர் வேகத்துக்கு மேற்போகாமல் செல்ல வேண்டும்.