சமூக சேவை வழங்கும் நன்கொடை அமைப்புகளின் பெயர் மாற்றப்படுகிறது

சமூக சேவை வழங்கும் நன்கொடை அமைப்புகளின் பெயர் மாற்றப்படுகிறது

1 mins read

சமூக சேவைகளை வழங்கிவரும் நன்கொடை அமைப்புகள் இனி தொண்டூழிய நல்வாழ்வு அமைப்புகள் என்று அழைக்கப்படாது. மாறாக, அவை 'சமூக சேவை அமைப்பு' என்று அழைக்கப்படும் என்று தேசிய சமூக சேவை மன்றம் தெரிவித்துள்ளது.

இந்தப் புதிய பெயர் சமூக சேவைத் துறையின் பணி களைச் சிறப்பாக எடுத்துரைக்கிறது என்று தேசிய சமூக சேவை மன்றத்தின் தலைவர் திருவாட்டி அனிதா ஃபாம் கூறினார்.

"தொண்டூழிய நல்வாழ்வு அமைப்பு இத்துறையின் வளமான மரபுடைமையைப் பிரதிபலித்தாலும், அந்தப் பெயர் இத்துறை செய்துவரும் இன்றைய பணிகளையும் எதிர்காலத்தில் நாம் செய்யக்கூடிய பணிகளையும் தெளி வாகப் பிரதிபலிக்கவில்லை என்று மன்றத்தின் உறுப்பு அமைப்புகளும் பங்காளித்துவ அமைப்புகளும் கருத்து தெரிவித்தன. அதன் காரணமாக பெயர் மாற்றம் செய்யப்பட வேண்டும் என்று முடிவெடுக்கப்பட்டது," என்றும் திருவாட்டி ஃபாம் விளக்கினார்.