தெம்பனிசில் உள்ள வீடமைப்பு வளர்ச்சிக் கழக வீட்டிலிருந்து நேற்று முன்தினம் $1,000 ரொக்கம் திருடிய 13 வயது பையன் கைது செய்யப்பட்டுள்ளார்.
தெம்பனிஸ் ஸ்திரீட் 24ல் உள்ள ஒரு அடுக்கு மாடி வீட்டில் திருட்டுச் சம்பவம் நிகழ்ந்துள்ளது என்று போலிசுக்கு நேற்று காலை 6.30 மணிக்குத் தகவல் கிடைத்தது.
போலிஸ் கேமராக்களின் காட்சிப் பதிவுகளிலிருந்தும் புலனாய்வுகளிலிருந்தும் திருடிய பையனின் அடையாளத்தை பிடோக் போலிஸ் பிரிவு அதிகாரிகள் உறுதிப்படுத்தினார்கள்.
வீடு புகுந்து திருடிய சந்தே கத்தின் பேரில் பையன் கைது செய்யப்பட்டார். வீவக வீட்டின் தாழ்வாரத்தின் சன்னல் வழியாக கையை விட்டு அங்கிருந்த பணத்தைத் திருடியிருக்கலாம் என்று அறிப்படுகிறது.
புலனாய்வுகளிலிருந்து இதுபோன்ற மற்றொரு திருட்டுச் சம்பவத்திலும் அந்தப் பையன் சம்பந்தப்பட்டிருக்கலாம் என்று நம்பப்படுகிறது.
திருட்டுச் சம்பவக் குற்றவாளிகளுக்கு ஏழு ஆண்டு சிறையும் அபராதமும் விதிக்கப்படலாம்.

