வெஸ்ட் கோஸ்ட்டில் தீ பாதுகாப்புப் பயிற்சி

வெஸ்ட் கோஸ்ட்டில் தீ பாதுகாப்புப் பயிற்சி

1 mins read
271fa631-4b85-4ebb-b6e8-7f9eb5eb7b6d
படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

தீச்சம்பவம் ஏற்படும்போது என்ன செய்வது என்பதன் தொடர்பில் விழிப்புணர்வை ஏற்படுத்தியது சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை, சென்ற மாதம் நடத்திய ஒரு நாள் பயிற்சி வகுப்பு. அதை வெற்றிகரமாக முடித்த வெஸ்ட் கோஸ்ட் உணவங்காடியின் 40 உணவுக் கடைக்காரர்கள் ஒவ்வொருவருக்கும் நேற்று ஒரு தீயணைப்புச் சாதனம் வழங்கப்பட்டது.

தினமும் நெருப்புடனும் அதிக வெப்பத்துடனும் வேலை செய்யும் உணவுக் கடைக்காரர்கள் தீச்சம்பவத்தில் சிக்கும் அபாயம் அதிகம் என்றும் எந்நேரமும் அவர்கள் தயார்நிலையில் இருப்பதற்குப் பயிற்சி அவசியம் என்றும் நேற்று நிகழ்வில் கலந்துகொண்ட வெஸ்ட் கோஸ்ட் குழுத்தொகுதியின் அமைச்சரும் தொடர்பு, தகவல் அமைச்சருமான திரு எஸ்.ஈஸ்வரன் குறிப்பிட்டார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்