'ஓபைக்' வசமாகிய 8,600 புதிய 'ஓஃபோ' மிதிவண்டிகள்

'ஓபைக்' நிறுவனம், 8,600 புதிய 'ஓஃபோ' வண்டிகளை $430,000 மதிப்பிலான ஒப்பந்தம் ஒன்றில்  வாங்கியுள்ளது.

'ஓபைக்' பகிர்வு மிதிவண்டிகள்,  'ஓஎஸ்எஸ் இன்வெர்ஷன்ஸ்'  என்ற கோஸ்டா ரிகா நாட்டு நிறுவனத்திற்குச் சொந்தமானவை. இப்போது இந்நிறுவனம் சேவையை நிறுத்திக்கொண்ட 'ஓஃபோ' வண்டிகளை வாங்கியுள்ளது. வாங்கிய புதிய வண்டிகளை நிறுவனம் கோஸ்டா ரிகாவுக்கு அனுப்பி அங்குப் பகிர்வுச் சேவையைத் தொடங்கத் திட்டமிட்டுள்ளது.

'ஓஃபோ' வண்டிகள் மிக நியாயமான விலையில் விற்கப்பட்டதாகவும் அவற்றுக்கான புத்தம்புதிய உதிரிப் பாகங்களும் சேர்த்து இந்த ஒப்பந்தத்தில் அளிக்கப்பட்டதாகவும் நிறுவனத்தின் இயக்குநர்களில் ஒருவரான திரு சேமுவல் சேவ்ஸ் குறிப்பிட்டார். உணவை விநியோகம் செய்வது, வாடகை வண்டிக்காக பதிவு செய்வது, மின்னியல் முறையில் பணம் செலுத்துவது என்று பல்வேறு சேவைகளை சிங்கப்பூரில் வழங்கி வரும்  'கிராப்' தளத்தைப் போலவே ஒரு புதிய செயலியை வடிவமைத்து, வாங்கப்பட்ட புதிய 'ஓஃபோ' வண்டிகளை இச்செயலி வழங்கும் சேவைகளுக்காகப் பயன்படுத்துவதுதான் நிறுவனத்தின் திட்டம்.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

நார்த்பாயிண்ட் சிட்டியில் நேற்று நடந்த ‘எஸ்ஜி செக்யூர்’ சாலைக் காட்சியில் துப்பாக்கிக் காரன் தாக்குதல் நடத்தினால் அதை எப்படிச் சமாளிப்பது என்பதை
விளக்க பாவனைக் காட்சி இடம்பெற்றது. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

25 Aug 2019

பயங்கரவாதத்தை விளக்கும் பயிற்சியில் பாவனைக் காட்சி