மூன்று புதிய உயர்நீதிமன்ற நீதிபதிகளும் அனைத்துலக நீதிபதி ஒருவரும் நியமனம்

மூன்று புதிய உயர்நீதிமன்ற நீதிபதிகளும் அனைத்துலக நீதிபதி ஒருவரும் நியமனம்

1 mins read
38688699-921c-4027-b4de-f50b0e7b99d6
-

அதிபர் ஹலிமா யாக்கோப், உயர்நீதிமன்றத்திற்கு மேலும் மூன்று நீதிபதிகளை நியமித்திருக்கிறார். இந்த நியமனங்களுடன் உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 23 ஆகக் கூடியுள்ளது. நீதிமன்ற ஆணையாளர்கள் பாங் காங் சாவ், ஆட்ரே லிம் யூன் செங், ஆங் சென் ஹொக் ஆகியோரின் தவணைக்காலம் ஆகஸ்ட் மாதம் 1ஆம் தேதி முதல் தொடங்கும்.

சிங்கப்பூர் அனைத்துலக வர்த்தக நீதிமன்றத்தில் திரு அர்ஜன் குமார் சிக்ரி அனைத்துலக நீதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. அவரது தவணைக்காலம் 2021ஆம் ஆண்டு ஜனவரி 4ஆம் தேதி நிறைவடையும்.