தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

அனுமதியின்றி நாட்டைவிட்டு வெளியேறி தேசிய சேவையாளர் மீது குற்றச்சாட்டு

1 mins read
295e7290-deca-45f6-b615-9e4c694f8ae9
-

தேசிய சேவை சட்டத்திற்குப் புறம்பாக சிங்கப்பூரைவிட்டு அனுமதியின்றி வெளியேறியது தொடர்பாக 22 வயது ஆடவர் ஒருவர் மீது நீதிமன்றத்தில் ஐந்து குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. சிங்கப்பூரில் பிறந்த ஜானத்தன் லீ ஹான் வன், நாட்டைவிட்டு வெளியேறுவதற்கான அனுமதி காலாவதியாகி மூன்று ஆண்டுகளுக்கு மேலாக இருந்தபோதும் சிங்கப்பூர் திரும்பவில்லை. அவர் எந்த நாட்டில் தங்கிருந்தார் என்பதை நீதிமன்ற ஆவணங்கள் குறிப்பிடவில்லை. அவர் தற்போது முழுநேர தேசிய சேவையாளராக இருக்கிறார்.

வெளிநாட்டுக்குச் செல்வதற்கான அனுமதி காலாவதியான பிறகும் அவர் சிங்கப்பூருக்கு வெளியே 2013ஆம் ஆண்டு செப்டம்பர் 1ஆம் தேதி முதல் 2017ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி வரை தொடர்ந்து இருந்தார்.