இன்ஸ்டகிராம் கணக்கு ஊடுருவப்பட்டது; மன்னிப்பு கேட்டது ஃபுட்பாண்டா

இன்ஸ்டகிராம் கணக்கு ஊடுருவப்பட்டது; மன்னிப்பு கேட்டது ஃபுட்பாண்டா

1 mins read
9ad18b1f-8d9f-4db3-bc0f-6cb0f242fbf2
-

இணைய உணவு விநியோக நிறுவனமான ஃபுட்பாண்டா, தனது இன்ஸ்டகிராம் கணக்கு ஊடுருவல் செய்யப்பட்டதை உறுதி செய்திருக்கிறது. தனது பக்கத்தில் வெளியிடப்பட்ட தகாத சொற்களைக் கொண்ட பதிவுகளுக்காகவும் வாடிக்கையாளர்களிடம் மன்னிப்பு கேட்டு அந்தப் பதிவுகளுக்குப் பதில் அளிக்கவேண்டாம் எனக் கேட்டுக்கொண்டுள்ளது.

' ஃபுட்பாண்டாஎஸ்ஜி' இன்ஸ்டகிராம் பக்கத்தின் கணக்கிலிருந்து ஆபாச குறுஞ்செய்திகளைப் பெற்றதாக வாடிக்கையாளர் ஒருவர் பெற்றதாக 'த ஸ்டார்' இணையத்தளம் குறிப்பிட்டுள்ளது.

'ஒசாமா' என்பவரால் அந்தக் கணக்கு ஊடுருவப்பட்டதாகக் கூறப்படுகிறது.