பிடோக் வட்டாரத்திலுள்ள அடகுக் கடையிலிருந்து திருட முயன்ற முதியவர் ஒருவர் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டிருக்கிறார். கடந்த வெள்ளிக்கிழமை ஓமர் அப்துல்லா, கையில் வெட்டுக்கத்தியுடன் அடகுக் கடைக்குச் சென்றார். ஆனால், அந்த கடையில், நகைகள் நிறைந்த கண்ணாடி உறையை அவரால் உடைக்க முடியவில்லை.
பிடோக் நார்த் ஸ்திரீட் 1 புளோக் லுள்ள 'வேலியூமேக்ஸ்' அடகுக்கடையில் பிற்பகல் 2 மணிக்கு, 67 வயது ஓமார் அப்துல்லா இந்தக் குற்றத்தைச் செய்திருப்பதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளார். கடையிலுள்ள ஆபரணங்களைத் திருட அவர் முயன்றபோதும் எதையும் அவரால் எடுக்க முடியாமல் கடையிலிருந்து ஓடினார்.
தகவல் அறிந்த போலிசார், ஈசூன் ஸ்திரீட் 22ல் ஓமாரைக் கைது செய்தனர்

