பிடோக் அடகுக்கடையில் கொள்ளை அடிக்க முயன்றவர் கைது

பிடோக் அடகுக்கடையில் கொள்ளை அடிக்க முயன்றவர் கைது

1 mins read

பிடோக்கில் உள்ள ஓர் அடகுக் கடையைக் கொள்ளையடிக்க முயன்ற 67 வயது ஆடவர் மீது நேற்று நீதி மன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது.

ஓமார் அப்துல்லா (படம்) என்ற அவர், கையில் வெட்டுக்கத்தி யுடன் பிடோக் நார்த் ஸ்திரீட் 1, புளோக் 213ல் உள்ள 'வேல்யுமெக்ஸ்' அடகுக்கடைக்கு கடந்த வெள்ளிக்கிழமை பிற்பகல் 2 மணிக்குச் சென்றார். அங்குள்ள கண்ணாடிப் பேழையைத் தனது கத்தியைக் கொண்டு உடைக்க முயன்றார். ஆனால் கண்ணாடிப் பேழை உடையவில்லை. மாறாக, கையில் வைத்திருத்த கத்தியின் கைப்பிடி உடைந்த தால், உடைந்த துண்டுகளைப் பொறுக்கிக்கொண்டு அவர் அங்கிருந்து தப்பித்து ஓடினார்.

"ஆந்த ஆடவர் தனது முகத்தை முகமூடியைக் கொண்டு மறைத்திருந்தார். கடையிலிருந்து தப்பித்து வந்து, யாரும் தன்னைக் கண்டுபிடித்துவிடாமல் இருக்க பலமுறை தனது உடையை மாற்றியுள்ளார். அப்்படி இருந்தும் பிடோக் போலிஸ் பிரிவின் அதிகாரிகள் தங்கள் தீவிர புலனாய்வு மூலம் அவரது அடையாளத்தை உறுதி செய்தனர்," என்றார் பிடோக் போலிஸ் பிரிவின் தலைவர் ஜூலியஸ் லிம். மனநலக் கழகத்தில் ஓமார் விசாரணைக் காவலில் வைக்கப்படுவதுடன் அங்கு அவருக்கு மனநலப் பரிசோத னையும் நடத்தப்படும். இம்மாதம் 29ஆம் தேதி அவர் மீண்டும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படுவார்.