மூன்று நாள் நடத்தப்பட்ட கடன் முதலை தொடர்பான அமலாக்க நடவடிக்கையில் 17 வயதுக்கும் 82 வயதுக்கும் இடைப்பட்ட மொத்தம் 129 பேர் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளனர். சோதனை நடவடிக்கை கடந்த திங்கட்கிழமை முதல் புதன்கிழமை வரை நடத்தப்பட்டது.
சிங்கப்பூரின் அனைத்து நில போலிஸ் பிரிவுகளும் குற்றவியல் புலனாய்வுப் பிரிவும் இணைந்து மேற்கொண்ட நடவடிக்கையில் 94 ஆண்களும் 35 பெண்களும் சிக்கினர்.
கைதான 129 பேரில் 28 பேர் கடன் முதலைகளுக்கு உதவியாளர்களாக இருந்திருக்கக்கூடும் என்று சந்தேகிக் கப்படுகிறது. மேலும் நால்வர் சாயத்தை ஊற்றுவது, கடன் விவரம் தொடர்பான வாசகங்களை எழுதுவது போன்ற கடன்முதலை தொந்தரவில் ஈடுபட்டனர் என்று நம்பப்படு கிறது. கைதானவர்களுக்கு எதிரான விசாரணை நடை பெற்று வருகிறது.
அவர்களின் குற்றம் நிரூபிக்கப்பட்டால் அபராதம், சிறை, பிரம்படி போன்றவை தண்டனைகளாக விதிக்கப்படலாம்.

