சீனாவின் அதிகாரி என்று பொய் கூறி ஏமாற்றிய மலேசியர் கைது

சீனாவின் அதிகாரி என்று பொய் கூறி ஏமாற்றிய மலேசியர் கைது

1 mins read

சீனாவின் போலிஸ் அதிகாரி என்ற தன்னைக் கூறிக் கொண்டு பொதுமக்களைத் தொலைபேசியில் அழைத்து அவர்களிடமிருந்து மொத்தம் $208,600 பணம் பறித்த 25 வயது மலேசிய ஆடவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

2018ஆம் ஆண்டு ஜூன் மாதத்திலிருந்து இதன் தொடர்பில் ஆறு புகார்கள் போலிசுக்குக் கிடைத்தன. அந்த ஆடவர் இந்த மோசடிகளை அரங்கேற்றிவிட்டு, சிங்கப்பூரில் இருந்து தப்பித்து விட்டார். அரச மலேசிய போலிஸ் படையின் உதவியால் அந்நபர் கோலாலம்பூரில் கடந்த வெள்ளிக் கிழமை கைது செய்யப்பட்டு அடுத்த நாள் சிங்கப்பூருக்குக் கொண்டு வரப்பட்டார். பொதுமக்களை ஏமாற்றி பணம் பறித்ததற்காக அந்த ஆடவர் மீது நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படும். குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு ஐந்து ஆண்டு வரையிலான சிறை, அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.