நான்கு புதிய நீதிபதிகள் நியமனம்

நான்கு புதிய நீதிபதிகள் நியமனம்

1 mins read

உயர் நீதிமன்றத்தின் புதிய நீதிபதிகளாக அதிபர் ஹலிமா மூவரை நேற்று நியமித்தார். நீதித்துறை ஆணையாளர்களாக இருக்கும் திரு பாங் காங் சாவ், திருவாட்டி ஆட்ரி லிம் யூன் செங், திரு ஆங் செங் ஹோக் ஆகியோர் பிரதமர் லீ சியன் லூங்கின் ஆலோசனையின் பேரில் உயர் நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்க ளின் புதிய பதவி ஆகஸ்ட் மாதம் 1ஆம் தேதியிலிருந்து தொடங்குகிறது.

மேலும் திரு அர்ஜன் குமார் சிக்ரி, சிங்கப்பூர் அனைத்துலக வர்த்தக நீதிமன்றத்தின் அனைத்துலக நீதிபதியாக நியமிக்கப் பட்டுள்ளார். அவரது பதவிகாலம் வரும் ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் 2021ஆம் ஆண்டு ஜனவரி 4ஆம் தேதி வரை நீடிக்கும்.

திரு சிக்ரி, இந்திய உச்ச நீதிமன்றத்தின் இரண்டாவது ஆக மூத்த நிதிபதியாக ஆறு ஆண்டுகள் பதவி வகித்து இவ்வாண்டு மார்ச் மாதத்தில் ஓய்வு பெற்றார்.

இந்த நான்கு புதிய நியமனங்களையும் சேர்த்து உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எண்ணிக்கை 23க்கு உயர்ந்துள்ளது. அவர்களில் மேல்முறையீட்டு நீதிபதிகள் நால்வரும் தலைமை நீதிபதி, நீதித்துறை ஆணையாளர்கள் நால்வர், மூத்த நீதிபதிகள் நால்வர், அனைத்துலக நீதி பதிகள் 17 பேர் ஆகியோரும் அடங்குவார்கள்.