பூன் லே வீடமைப்பு வளர்ச்சிக் கழக வீடு ஒன்றில் மூண்ட தீயில் அறுவர் காயமடைந்துள்ளனர். பூன் லே டிரைவ் புளோக் 191ல் நடந்த இந்தச் சம்பவம் பற்றி சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையினருக்குத் திங்கட்கிழமை (ஜூலை 15) இரவு 10.15 மணிக்குத் தகவல் கிடைத்தது.
புளோக்கிலிருந்து குடியிருப்பாளர்களை வெளியேற்ற குடிமைத் தற்காப்பு அதிகாரிகளுக்கு போலிசார் உதவி செய்தனர். இறுதியில் அந்தத் தீ, ஒரே நீர்ப்பாய்ச்சும் குழாயுடன் அணைக்கப்பட்டது. ஐந்து பெண்களும் ஓர் ஆடவரும் இங் டெங் ஃபோங் பொது மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர்.
வீட்டிலுள்ள அனைத்து பொருட்களும் தீயில் எரிந்தன. சம்பவத்திற்கான காரணம் தற்போது ஆராயப்பட்டு வருகிறது.

