பள்ளிச் சீருடையில் இருந்த மாணவருக்கு சிகரெட் விற்ற அங் மோ கியோ சில்லறை விற்பனை கடையின் உரிமம் ரத்து

பள்ளிச் சீருடையில் இருந்த மாணவருக்கு சிகரெட் விற்ற அங் மோ கியோ சில்லறை விற்பனை கடையின் உரிமம் ரத்து

1 mins read
282fb817-e84d-4743-bc95-7bb3d300cb06
அங் மோ கியோ அவென்யூ 6, புளோக் 635ல் உள்ள இந்தக் கடை, வாடிக்கையாளரின் வயதை உறுதிப்படுத்தாமல் பள்ளிச் சீருடையில் இருந்த 17 வயது மாணவருக்கு சிகரெட் விற்றது. படம்: சுகாதார அறிவியல் ஆணையம் -

அங் மோ கியோவில் உள்ள சில்லறை விற்பனைக் கடை பள்ளிச் சீருடையில் இருந்த வயது குறைவான மாணவருக்கு சிகரெட் விற்றதால் அதன் புகையிலை விற்கும் உரிமம் ரத்து செய்யப்பட்டு உள்ளது என்று சுகாதார அறிவியல் ஆணையம் நேற்று தெரிவித்தது.

அங் மோ கியோ அவென்யூ 6, புளோக் 635ல் உள்ள 'லியான் லீ சுப்பர்மார்ட்' எனும் கடையின் விற்பனையாளர், சிகரெட் கேட்கும் மாணவரின் வயதை உறுதி செய்யாமல் அவருக்கு சிகரெட் விற்றார் என்றும் அவர் முதிர்ச்சியாகக் காணப்பட்டதால் தான் அவ்வாறு செய்ததாக அந்த விற்பனையாளர் சொன்னார் என்றும் ஆணையம் கூறியது.

சட்டபூர்வ வயதான 19க்குக் கீழ்ப்பட்டவர்களுக்கு முதல் முறையாக சிகரெட் விற்ற மேலும் நான்கு புகையிலை விற்கும் கடைகளின் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டது.

புக்கிட் பாத்தோக் வெஸ்ட் அவென்யூ 2, புளோக் 424ல் உள்ள ஷுன் டாசெங் மளிகைக் கடை, பொங்கோல் சென்ட்ரல் புளோக் 622Dல் உள்ள ஜாயண்ட் எக்ஸ்பிரஸ், கிளமெண்டி எம்ஆர்டி நிலையத்தில் உள்ள 'பஸ்' (Buzz) கடை, அங் மோ கியோ அவென்யூ 3, புளோக் 51ல் உள்ள S-11 (AMK Central) உணவுக்கடை ஆகியவை அந்த நான்கு கடைகள்.

ஷுன் டாசெங் மளிகைக் கடை யின் உரிமம் மே மாதத்திலும் மற்ற மூன்று கடைகளின் உரிமம் இம்மாதத்திலும் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டன.

இந்தக் கடைகள் ஆறு மாதங் களுக்கு புகையிலை சார்ந்த பொருட்களை விற்கக்கூடாது.