கடன்முதலைகளிடமிருந்து கடன் வாங்கிய 160 வெளிநாட்டு ஊழியர்கள் நாடு கடத்தப்பட்டனர்

கடன்முதலைகளிடமிருந்து கடன் வாங்கிய 160 வெளிநாட்டு ஊழியர்கள் நாடு கடத்தப்பட்டனர்

1 mins read

கடன்முதலைகள் மற்றும் உரிமமில்லாமல் கடன்கொடுப்போரிடம் இருந்து கடந்த அக்டோபர் மாதத்திலிருந்து கடன் வாங்கிய 160 வெளிநாட்டு ஊழியர்கள் தங்கள் நாட்டுக்குத் திருப்பி அனுப்பப்பட்டனர் என்று மனிதவள அமைச்சு தெரிவித்துள்ளது.

அவர்களில் பெரும்பாலோர் இல்லப் பணிப்பெண்கள் என்றும் அது கூறியது.

மேலும் இரு பெண்கள் உரிமமில்லாமல் கடன்கொடுப்போருக்கு இடைத்தரகர்களாகச் செயல்பட்டதற்காக அமைச்சின் விசாரணை

யை எதிர்நோக்குகின்றனர்.

வேலை அனுமதிச் சீட்டு இல்லாமல் சட்டவிரோதமாக வேலை செய்ததற்காக அவர்கள் வெளிநாட்டு மனிதவள வேலைவாய்ப்புச் சட்டத்தின்படி குற்றம் சாட்டப்படலாம். குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவர்களுக்கு $20,000 வரை அபராதம் அல்லது இரண்டு ஆண்டு வரையிலான சிறை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

நேற்று முன்தினம் சட்ட அமைச்சு வெளிநாட்டு ஊழியர்கள் கடன் வாங்குவது குறித்த புதிய விதிமுறைகளை அறிவித்தது.

"இந்தப் புதிய விதிமுறைகளுக்குப் பிறகு வெளிநாட்டு ஊழியர்களின் கடன் வாங்கும் செயல்களை அரசாங்கம் தொடர்ந்து அணுக்கமாகக் கவனிக்கும்.

"விதிமுறைகளைப் பின்பற்றும் நிலைமையில் முன்னேற்றம் இல்லை என்றால் வெளிநாட்டு ஊழியர்களுக்குக் கடன் வழங்கும் முறையை மொத்தமாக ரத்து செய்யவும் அரசாங்கம் தேவையான நடவடிக்கைகளை எடுக்கும்," என்றும் சட்ட அமைச்சு வலியுறுத்

தியது.