பொதுப் பாதையில் அனுமதிப்பட்ட அளவான 70 சென்டி மீட்டரைக் காட்டிலும் குறுக்களவில் 6 சென்டிமீட்டர் அதிகமாக இருந்த மின்ஸ்கூட்டரை ஓட்டிய 40 வயது ஆடவருக்கு நேற்று $600 அபராதம் விதிக்கப்பட்டது.
போதைப் பொருள் குற்றங்களுக்காக தற்போது சிறையில் உள்ள லோ இசெல் ஃபெய்சால் எனும் ஆடவர், சட்டவிரோத தனிநபர் நடமாட்டச் சாதனத்தைப் பயன்படுத்தியதற்காக சிங்கப்பூரில் நீதிமன்றத்தில் குற்றம் நிரூபிக்கப்பட்டு, தண்டனை பெற்ற முதல் நபராவார்.
கடந்த ஆண்டு மே மாதம் 15ஆம் தேதி இரவு 7 மணிக்கு ஃபெய்சால் மவுண்பேட்டன் ரோட்டில் தனது மின்ஸ்கூட்டரை ஓட்டி வந்தார் என்று நீதிமன்றத்தில் கூறப்பட்டது.
பொதுப் பாதையில் சட்டவிரோத தனிநபர் நடமாட்டச் சாதனங்களைப் பயன்படுத்துவதால், பொதுமக்களின் பாதுகாப்புக்கு ஆபத்து ஏற்படுகிறது என்பதால் நிலப் போக்குவரத்து ஆணையம் அதைக் கடுமையாக நோக்குகிறது என்றார் அதன் வழக்கறிஞர் திரு டேனியல் மரினி.

