தனது மின்ஸ்கூட்டரால் முதியவர் ஒருவரை மோதி அவரது மூளையில் காயத்தை ஏற்படுத்திய 'கிராப்ஃபூட்' உணவு விநியோகிப்பாளருக்கு நேற்று தடுப்புக் காவல் தண்டனை விதிக்கப்பட்டது.
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 21ஆம் தேதி நண்பகல் வாக்கில் ஜெகதீ்ஸ்வரன் கலைச்செல்வன் (படம்) எனும் அந்த 22 வயது இளையர் சிராங்கூன் நார்த் அவென்யூ 1, புளோக் 152ன் நடைபாதையில் தனது மிஸ்கூட்டரை வேகமாக ஒட்டிச் சென்றார். அப்போது அவ்வழியாகப் படிகளில் இறங்கி வந்த 75 வயது திரு லியாவ் போக் சாய் எனும் முதியவரை ஜெகதீ்ஸ்வரன் பார்க்காமல் அவர் மீது மோதினார். அந்த முதி யவருக்கு மூளையில் ரத்தக் கசிவும் கன்னத்தில் எலும்பு முறிவு ஏற்பட்டது. அவர் இப்போது குணமாகிவிட்டார்.
கவனக்குறைவாக மின்ஸ்கூட்டரை ஓட்டி முதியவருக்குக் காயம் விளைவித்த குற்றத்துக்காக ஜெகதீ்ஸ்வரனுக்கு ஏழு நாள் தடுப்புக் காவல் தண்டனை விதிக்கப்பட்டது.
இந்தத் தண்டனையின்படி அவர் சிறிது நாட்கள் சிறையில் இருந்தாலும் விடுதலைக்குப் பிறகு அவருக்குக் குற்றவியல் குறிப்பு இருக்காது. மேலும் ஜெகதீ்ஸ்வரன் ஓர் ஆண்டுக்குள் 140 மணிநேரம் சமூக சேவை புரிய வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டது.
"ஜெகதீ்ஸ்வரனால் தனது மின்ஸ்கூட்டரைத் தக்க தருணத் தில் பாதுகாப்பாக நிறுத்த முடியவில்லை. அதனால் அவர் முதியவர் மீது மோதிவிட்டார்," என்று அரசு தரப்பு வழக்கறிஞர் சோங் யோங்ஹுவி நீதிமன்றத்தில் தெரிவித்தார்

