தரவுப் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு புதிய பயிற்சித் திட்டம்

தரவுப் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு புதிய பயிற்சித் திட்டம்

2 mins read
7793da78-29c7-474d-b460-0dab510af2a1
கோப்புப்படம்: ஸ்ட்ரைட்ஸ் டைம்ஸ் -

தரவுப் பாதுகாப்பில் தங்கள் பங்கு பற்றி தெளிவு பெறவும் தங்கள் ஆற்றல்களைப் பெருக்கிக்கொள்ளவும், அதன் மூலம் நிறுவனங்கள் தரவு பயன்பாட்டில் தங்களைப் பாதுகாத்துக்கொள்ளவும் தனிநபர் தரவுப் பாதுகாப்பு ஆணையம், தரவுப் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு புதிய கட்டமைப்பையும் பயிற்சித் திட்டத்தையும் அறிவித்துள்ளது.

சிங்கப்பூரில் தளம் அமைத்து உள்ள நிறுவனங்கள் இப்போது அனைத்துலக அளவில் அங்கீகரிக்கப்பட்ட ஒரு ஜோடி தரவுப் பாதுகாப்புச் சான்றிதழ்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

இதன் மூலம் இங்குள்ள நிறு வனங்கள், தரவுப் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படுவதுடன் ஜப்பான், அமெரிக்கா, மெக்சிகோ போன்ற நாடுகளுடன் தரவுகளைப் பகிர்ந்துகொள்ளவும் விரைவாக வர்த்தகம் புரியவும் முடியும்.

தரவுப் பாதுகாப்பு அதிகாரி களுக்கான கட்டமைப்பு மற்றும் பயிற்சித் திட்டத்தைத் தொழில்துறைப் பங்காளிகளுடன் சேர்ந்து தனிநபர் தரவுப் பாதுகாப்பு ஆணையம் உருவாக்கியுள்ளது.

அதில், தரவுப் பாதுகாப்பு அதி காரி, தரவு ஆற்றல் நிர்வாகி, வட்டார தரவுப் பாதுகாப்பு ஆகிய மூன்று வேலைகளுக்குத் தேவையான பங்களிப்பும் பொறுப்புகளும் விளக்கப்பட்டிருக்கும்.

இந்தப் பணிகளில் தரவுப் பாது காப்பு நிர்வாகம், தரவுக் கசிவு நிர் வாகம், நெறிமுறைகள், வடிவமைப்பு சிந்தனை ஆகியவற்றில் பல்வேறு நிலைகளில் திறன்கள் தேவைப்படும் என்றும் ஆணையம் குறிப்பிட்டது.

தங்களை மேம்படுத்திக்கொள்ள எப்படிப்பட்ட பயிற்சிகள் தேவைப்படும் என்று இத்திட்டம் அடையாளம் காணும்.

இந்தக் கட்டமைப்பு பற்றி நேற்று நடைபெற்ற தனிநபர் தரவுப் பாதுகாப்பு கருத்தரங்கில் அறிவித்த தொடர்பு, தகவல் அமைச்சர் எஸ். ஈஸ்வரன், "ஒரு திறன்மிக்க தரவுப் பாதுகாப்பு அதிகாரியின் கீழ் இயங்கும் தரவுப் பாதுகாப்புக் குழு என்பது வாடிக்கையாளரின் நம்பிக்கையைப் பெறவும் வர்த்தக வளர்ச்சிக்கு ஆதரவு பெறவும் நிறுவனத்தின் நிர்வாகத்துக்கு ஒரு ஆற்றல்மிக்க கூறாக அமையும்," என்றார்.

தேசிய தொழிற்சங்க காங்கிரஸ், வேலைவாய்ப்பு, வேலைநியமனக் கழகம், என்டியுசி கற்றல் மையம் ஆகியவற்றுடன் சேர்ந்து தனிநபர் தரவுப் பாதுகாப்பு ஆணையம், தரவுப் பாதுகாப்பு அதிகாரிகளுக்குப் பயிற்சியளிக்க சோதனை அடிப்படையிலான 12 மாதப் பயிற்சிக் கட்டமைப்பை உருவாக்கும்.

தரவுப் பாதுகாப்பு தொடர்பான பயிற்சிகள் வரும் அக்டோபர் மாதத்திலிருந்து கிடைக்கும் என்றும் இதன் மூலம் ஓராண்டுக்குக் குறைந்தது 500 தரவுப் பாதுகாப்பு அதிகாரிகள் பலனடைவார்கள் என்றும் கூறப்பட்டது.

தற்போது 30,000 தரவுப் பாது காப்பு அதிகாரிகள் இந்தப் பயிற்சி களுக்குப் பதிவு செய்துள்ளனர் என்றும் தனிநபர் தரவுப் பாதுகாப்பு ஆணையம் தெரிவித்தது.