நிலப் போக்குவரத்து ஆணையம் நேற்று நடத்திய வாகன உரிமைச் சான்றிதழுக்கான (சிஓஇ) ஏலக்குத்தகையில் கட்டணங்கள் ஏற்ற, இறக்கமாக இருந்தன.
1,600 சிசிக்கு உட்பட்ட சிஓஇ கட்டணம் $28,589லிருந்து இறங்கி $26,667 ஆனது. 1,600 சிசிக்கு மேற்பட்ட வாகனங் களுக்கான சான்றிதழ் கட்டணம் $34,000லிருந்து உயர்ந்து $39,406 ஆனது. வர்த்தக வாகனங்களுக்கான பிரிவில் $25,089 என்றிருந்த சிஓஇ கட்டணம் நேற்று $24,599க்குச் சரிந்தது. மோட்டார் சைக்கிள்களுக்கான சான்றிதழ் கட்ட ணம் $3,081லிருந்து உயர்ந்து $3,554 ஆனது. பொதுப் பிரிவு வாகனங்களுக்கான சிஓஇ கட்டணம் $36,901லிருந்து உயர்ந்து $39,889 ஆனது.

