பெண்ணை மிரட்டி பணம் வாங்க முயன்ற இளையர் கைது

பெண்ணை மிரட்டி பணம் வாங்க முயன்ற இளையர் கைது

1 mins read
5ad57af0-f635-470d-8d87-ee92520b0912
-

ஒரு பெண் உள்ளிட்ட பலரை மிரட்டி பணம் வாங்க முயன்ற 19 வயது இளையர் கைது செய்யப்பட்டிருக்கிறார். பாதிக்கப்பட்ட ஒரு பெண், பணம் கொடுக்காவிட்டால் தனது தனிப்பட்ட தகவல்களை இணையத்தில் வெளியிடப்போவதாக அந்த இளையர் மிரட்டியதாக போலிசாரிடம் தெரிவித்தார்.

அந்த இளையரின் அடையாளத்தை விசாரணையின்மூலம் உறுதி செய்த பிடோக் போலிஸ் பிரிவின் அதிகாரிகள் நேற்று அவரைப் பிடித்தனர். அத்துடன் அவரிடம் இருந்த ஒரு கைபேசியும் பறிமுதல் செய்யப்பட்டது. கைதான இளையர், இதே போல மற்றவர்களையும் மிரட்டி பணம் வாங்க முயன்றதாகக் கூறப்படுகிறது. இந்தச் சம்பவத்தைப் போலிசார் தொடர்ந்து விசாரிக்கின்றனர்.

மற்றவர்களை மிரட்டி பணம் வாங்க முயல்பவர்களுக்கு இரண்டு முதல் ஐந்து ஆண்டுகள் வரையிலான சிறைத்தண்டனையுடன் பிரம்படிகளும் விதிக்கப்படலாம்.