சுடச் சுடச் செய்திகள்

மத்திய விரைவுச்சாலையில் தீப்பற்றி எரிந்த வேன்

ஆயர் ராஜா விரைவுச்சாலையை நோக்கிச் செல்லும் மத்திய விரைவுச்சாலையில் இன்று காலை சென்றுகொண்டிருந்த ஒரு வேன் திடீரென தீப்பற்றி எரிந்தது.

ஊட்ரம் ரோட்டுக்குப் பிறகான மத்திய விரைவுச்சாலையில் நடந்த இந்தச் சம்பவம் பற்றி சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையினருக்குக் காலை 6.30 மணிக்குத் தகவல் கிடைத்தது.

இந்தச் சம்பவத்தைக் காட்டும் காணொளியை ‘ஸ்டாம்ப்’ இணையத்தளம் வெளியிட்டது.

தீப்பிழம்பாக மாறிய அந்த வேனிலிருந்து சில ஆடவர்கள் ஓடிக்கொண்டிருந்ததை அந்தக் காணொளி காட்டுகிறது. 

சம்பவத்தால் பாதிக்கப்பட்ட ஒருவர் மருத்துவமனைக்குச் செல்ல மறுத்தார். அந்நபர் வேன் ஓட்டுநரா என்பது தெரியவில்லை.

விசாரணை தொடர்கிறது.