குடியுரிமை விண்ணப்பம்: பொய்யுரைத்த 'போலோ' ஆட்டக்காரருக்கு சிறை

சிங்கப்பூரின் மிகப் பிரபலமான 'போலோ' விளையாட்டாளரான 53 வயது அப்துல் சத்தார் கான் (படம்) இவ்வாண்டு நவம்பரில் நடைபெறும் தென்கிழக்காசிய விளையாட்டுகளில் சிங்கப்பூரைப் பிரதிநிதிக்க தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்று இன்று நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

பாகிஸ்தானில் பிறந்த அப்துல் சத்தார், 2006ஆம் ஆண்டில் குடிநுழைவு சோதனைச்சாவடி ஆணையத்திடம் சிங்கப்பூர் நிரந்தரவாசத்துக்கு விண்ணப்பித்தபோது தமது கல்வித் தகுதிகள் தொடர்பில் பொய்யான தகவல்களையும் சான்றிதழ்களையும் சமர்ப்பித்திருக்கிறார். ஈராண்டுகள் கழித்து அவருக்கு சிங்கப்பூர் நிரந்தரவாசத் தகுதி வழங்கப்பட்டது. பின்னர் சிங்கப்பூர் குடியுரிமைக்கு அப்துல் சத்தார் விண்ணப்பித்தபோது, மீண்டும் தமது கல்வித் தகுதிகள் தொடர்பில் பொய்யான தகவல்களைச் சமர்ப்பித்தார். அவருக்கு 2009ஆம் ஆண்டு ஜூலை 31ஆம் தேதி சிங்கப்பூர் குடியுரிமை வழங்கப்பட்டது.

பொய்யான தகவல் அளித்த குற்றத்தை ஒப்புக்கொண்ட அப்துல் சத்தாருக்கு நேற்று இரண்டு வாரச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. இதனால் அவரது சிஙகப்பூர் குடியுரிமைத் தகுதிக்குப் பாதிப்பு ஏற்படுமா என்று நீதிமன்ற ஆவணங்களில் குறிப்பிடப்படவில்லை.

அப்துல் சத்தாருக்கு $10,000 பிணை அனுமதிப்பட்டுள்ளது. அவர் சிறைத் தண்டனைத் தொடங்க இம்மாதம் 23ஆம் தேதியன்று நீதிமன்றத்தில் சரணடைய வேண்டும்.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

நார்த்பாயிண்ட் சிட்டியில் நேற்று நடந்த ‘எஸ்ஜி செக்யூர்’ சாலைக் காட்சியில் துப்பாக்கிக் காரன் தாக்குதல் நடத்தினால் அதை எப்படிச் சமாளிப்பது என்பதை
விளக்க பாவனைக் காட்சி இடம்பெற்றது. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

25 Aug 2019

பயங்கரவாதத்தை விளக்கும் பயிற்சியில் பாவனைக் காட்சி