'கிரைம்வாட்ச்' பாணியில் திருடிய இளையர்களுக்கு சீர்திருத்தப் பயிற்சி

தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'கிரைம்வாட்ச்' குற்றக்காண்காணிப்பு நிகழ்ச்சியைப் பார்த்து அதில் வரும் காட்சியைப் போல திருடிய இளையர்கள் இருவருக்கு இன்று குறைந்தது ஓராண்டு சீர்திருத்தப் பயிற்சித் தண்டனை விதிக்கப்பட்டது.

16 வயது தியோஃபீலியஸ் ஜெபராஜ், 18 வயது ஜான் கரண் கருணாகரன் இருவரும் சீர்திருத்தப் பயிற்சி நிலை யத்தில் தடுத்து வைப்படுவார்கள். அவர்கள் அங்கு கட்டுப் பாடான வாழ்க்கைமுறையே மேற்கொள்வார்கள். இந்த இரு இளையர்களும் 14 வயது பையனும் சேர்ந்து பாலியல் ஊழி யர்களிடம் கொள்ளையடிக்க திட்டம் போட்டனர். 

தியோஃபீலியசும் ஜானும் கடந்த மாதம் 28ஆம் தேதி தங்கள் ஆயுதமேந்தி கொள்ளையடித்த குற்றத்தை ஒப்புக் கொண்டனர். பெயர் குறிப்பிட முடியாத 14 வயது பையனின் குற்றம் மே மாதம் 15ஆம் தேதி நிரூபிக்கப்பட்டது. அவர் சிங்கப்பூர் பையன்கள் இல்லத்தில் இரண்டு ஆண்டு சீர்திருத்தப் பயிற்சித் தண்டனையை மேற்கொண்டு வருகிறார்.
 

இப்பகுதியில் மேலும் செய்திகள்

நார்த்பாயிண்ட் சிட்டியில் நேற்று நடந்த ‘எஸ்ஜி செக்யூர்’ சாலைக் காட்சியில் துப்பாக்கிக் காரன் தாக்குதல் நடத்தினால் அதை எப்படிச் சமாளிப்பது என்பதை
விளக்க பாவனைக் காட்சி இடம்பெற்றது. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

25 Aug 2019

பயங்கரவாதத்தை விளக்கும் பயிற்சியில் பாவனைக் காட்சி