1எம்டிபி சர்ச்சை; 50.3 மில்லியன் வெள்ளியைத் திருப்பிக் கொடுக்கும் சிங்கப்பூர்

1எம்டிபி நிறுவனத்துடன் தொடர்புடைய 50.3 மில்லியன் வெள்ளியை சிங்கப்பூர் மலேசியாவுக்குத் திருப்பித் தரவுள்ளது. இந்தச் சர்ச்சையின் தொடர்பில் மலேசியாவின் முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக், பதவியிலிருந்து வெளியேற்றப்பட்டு தற்போது நீதிமன்ற விசாரணையை எதிர்நோக்குகிறார்.

ஆசியா முதல் அமெரிக்கா வரை விரிந்திருக்கும் இந்தப் பண மோசடி சர்ச்சையின் தொடர்பில் விசாரணை நடத்தும் உலக நாடுகளில் சிங்கப்பூரும் ஒன்று. அந்தப் பணத்தை மலேசியாவிடம் திருப்பிக் கொடுக்க தனது வர்த்தகப் பிரிவு விண்ணப்பித்திருப்பதாக சிங்கப்பூர் போலிஸ் தெரிவித்தது. 

“இந்தத் தொகையின் ஒரு பகுதி மலேசியாவுக்கு ஏற்கெனவே மாற்றப்பட்டுள்ளது. எஞ்சிய தொகையை வங்கிகள் தற்போது கையாள்கின்றன,” என்று போலிசார் தெரிவித்தனர்.

பணம் எங்கிருந்து பறிமுதல் செய்யப்பட்டது என்பது குறித்து விளக்கம் கொடுக்கப்படவில்லை.

 

இப்பகுதியில் மேலும் செய்திகள்

நார்த்பாயிண்ட் சிட்டியில் நேற்று நடந்த ‘எஸ்ஜி செக்யூர்’ சாலைக் காட்சியில் துப்பாக்கிக் காரன் தாக்குதல் நடத்தினால் அதை எப்படிச் சமாளிப்பது என்பதை
விளக்க பாவனைக் காட்சி இடம்பெற்றது. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

25 Aug 2019

பயங்கரவாதத்தை விளக்கும் பயிற்சியில் பாவனைக் காட்சி