(காணொளி): பொது இடத்தில் நிர்வாண பவனி; விலங்கிடப்பட்டார் ஆடவர்

புக்கிட் பாத்தோக் வட்டாரத்திலுள்ள பவிலியன் பூங்காவின் சாலையோரத்தில் நிர்வாணமாகத் திரிந்துகொண்டிருந்த ஓர் ஆடவர் கைது செய்யப்பட்டிருக்கிறார்.

புக்கிட் பாத்தோக் ரோட்டில் மாலை 6.25 மணிக்கு உதவி கேட்டு அழைப்பு வந்ததாக போலிசார் தெரிவித்தனர். போலிசாரை அழைத்த லேரி என்ற வாகனமோட்டுநர், அந்த ஆடவர் அணிந்திருந்த துணிகளை வேறு யாரோ பலவந்தமாக உருவி எடுத்ததாகத் தாம் எண்ணியதாக ‘ஸ்டாம்ப்’ தளத்திடம் தெரிவித்தார்.

ஆனால் அந்த ஆடவர் வேண்டுமென்றே நிர்வாணமாக நின்றுகொண்டிருந்ததாக போலிசார் பின்னர் உறுதி சென்றனர். அந்த ஆடவர், தனது பிறப்புறுப்பை மறைக்க சிவப்புத் துணி ஒன்றைப் பயன்படுத்தியது லேரியின் காருக்குள் இருந்த கேமராவில் பதிவானது. விசாரணை தொடர்கிறது.