ஆரோக்கிய உணவுப் பழக்கத்தை ஊக்குவிக்கும் ஓராண்டு திட்டம்

ஆரோக்கிய உணவுப் பழக்கத்தை ஊக்குவிக்கும் ஓராண்டு திட்டம்

1 mins read
d9cd8733-9374-446a-9220-b6b217988ccb
பிள்ளைகள் ஆரோக்கியமாக இருப்பதற்காக அனைவரும் ஒன்றிணைந்து செயல்படவேண்டும் என்று நேற்று வடகிழக்கு வட்டார மேயர் டெஸ்மண்ட் சூ கூறினார். படம்: 'கெல்லோக்ஸ்' -

எதிர்காலத்தை நிர்ணயிக்கும் நம் பிள்ளைகள் ஆரோக்கியமாக இருப்பதற்காக அனைவரும் ஒன்றிணைந்து செயல்படவேண்டும் என்று நேற்று வடகிழக்கு வட்டார மேயர் டெஸ்மண்ட் சூ கூறினார். பொங்கோல் நார்த்தின் 'பிசிஎஃப் ஸ்பார்க்கல்டோட்ஸ்' நிலையத்தில் உள்ள 500க்கும் மேற்பட்ட பிள்ளைகளுக்கு அடுத்த ஒரு ஆண்டுக்குக் காலை சிற்றுண்டியாக 'கெல்லோக்ஸ்' நிறுவனத்தின் தானிய உணவு வழங்கப்படும்.

வடகிழக்கு சமூக மேம்பாட்டு மன்றமும் 'கெல்லோக்ஸ்' நிறுவனமும் இணைந்து வழங்கும் இத்திட்டத்தின்கீழ் தேசிய அளவில் இருந்து வரும் சில பிரச்சினைகள் களையப்படும் என்று அவர் தெரிவித்தார். சிறு வயதிலேயே உடல் பருமனை எதிர்நோக்கும் பிள்ளைகளின் எண்ணிக்கை ஏறுமுகமாகவே இருந்து வருகிறது. இத்திட்டம்மூலம் பிள்ளைகளுக்கு ஒரு நல்ல தொடக்கமும் ஆரோக்கிய அடித்தளமும் அவர்களின் வாழ்க்கையில் அமையும் என்று 'கெல்லோக்ஸ்' கூறியது.

நேற்றைய நிகழ்வில் 300க்கும் மேற்பட்ட பிள்ளைகளும் அவர்களின் பெற்றோரும் 'கெல்லோக்ஸ்' தானிய உணவைக் காலை சிற்றுண்டியாகச் சாப்பிடத் திரண்டனர். திட்டத்தின்படி பிள்ளைகளுக்கு வழங்கப்பட உள்ள தானிய உணவு அணைத்து பேரங்காடிகளிலும் கிடைக்கக்கூடியவை.