விநியோகிப்பு ஓட்டுநரான கைருல் கமாலுக்கு, 25, தனது கைக்குழந்தையின் உடல் நலமே முக்கியம்.
இந்தச் சூழ்நிலையில் உட் லண்ட்ஸ் வட்டாரத்தில் அறிமுகமாகியுள்ள புதிய திட்டம் தம்மைப் போன்ற இளம் தம்பதிகளுக்கு கைகொடுக்கும் என்று அவர் நம்புகிறார்.
எம்3@டவுன் எனும் அந்தத் திட்டம் மலாய்/முஸ்லிம் தொண்டூழியர்களையும் சமூகத் தலைவர்களையும் ஒருங்கிணைத்து குடியிருப்பாளர்களின் அக்கறைக்குரிய அம்சங்களில் கவனம் செலுத்துகிறது.
இந்தத் திட்டத்தில் எட்டாவது நகரமாக உட்லண்ட்ஸ் நேற்று சேர்த்துக் கொள்ளப்பட்டது.
கடந்த ஆறு மாதங்களாக வீடு வீடாகச் சென்றும் சமூக நிகழ்ச்சிகளின் வாயிலாகவும் உட்லண்ட்ஸ் குடியிருப்பாளர்களின் அக்கறைக்குரிய மூன்று அம்சங்கள் அடையாளம் காணப்பட்டன.
நிதி, பொருளியல் ஆயத்த நிலை, சுகாதார ஆயத்தநிலை, குடும்பம் மற்றும் சமூக நலன் ஆகியவை அந்த மூன்று அம்சங்கள்.
திரு கைருலின் மகனுக்கு மூன்று வயதாகிறது. தன்னுடைய மகனின் உடல் நலத்தைப் பராமரிப்பதே தமக்குள்ள பெரிய சவால் என்று அவர் கூறினார்.
முயிஸ், சுய உதவிக் குழுவான மெண்டாக்கி, 'மெஸ்ரா' எனும் மக்கள் கழக மலாய் நற்பணி செயற்குழுக்கள் பேரவை ஆகியவற்றின் ஒத்துழைப்பில் கடந்த ஆண்டு எம்3@டவுன் திட்டம் தொடங்கப்பட்டது.
கடந்த ஆண்டு தேசிய நாள் பேரணியில் பேசிய பிரதமர் லீ சியன் லூங்கும் எம்3 மூலம் சமூகத்திற்கு பங்காற்ற அதிகமானவர்கள் முன்வர வேண்டும் என்று மலாய்காரர் களுக்கு அழைப்பு விடுத்திருந்தார். சமூகம் எதிர்நோக்கும் பிரச்சினை களைச் சமாளிக்க அரசாங்கம், மலாய்/முஸ்லிம் அமைப்புகளுக்கு இடையிலான ஒத்துழைப்பு எவ்வாறு உதவுகிறது என்பதையும் அப்போது பிரதமர் லீ சுட்டிக்காட்டியிருந்தார்.

