சிங்கப்பூரின் சுகாதாரப் பராமரிப்பு கட்டமைப்பில் சமூக மருத்துவமனைகள் வழங்கிவரும் இடைநிலை பராமரிப்பு சேவைகள் முக்கிய பங்கு வகிக்கின்றன என்று துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட் கூறியுள்ளார்.
எதிர்காலத்தில் சமூக மருத்துவமனைகளின் சேவைகள் பெரிய அளவில் பங்கு வகிக்கலாம் என்றும் அவர் சொன்னார். சனிக்கிழமையன்று செயின்ட் லூக்ஸ் மருத்துவமனையின் அறப்பணி விருந்து நிகழ்ச்சியில் பேசிய திரு ஹெங், சிங்கப்பூரின் மூப்படையும் மக்கள் தொகை அதிவேகத்தில் அதிகரித்து வருவதாகத் தெரிவித்தார். 2030ல் நான்கு சிங்கப்பூரர்களில் ஒருவர் 65 அல்லது அதற்கும் மேற்பட்ட வயதைக் கொண்டிருப்பார்கள். தற்போது எழுவரில் ஒருவர் 65 வயதைக் கடந்தவராக இருக்கிறார்.

