பள்ளி முகாம் ஒன்றில் பதின்ம வயது சிறுவர்கள் ஐவரை மானபங்கம் செய்த முன்னாள் தேசியப் பல்கலைக்கழக விரிவுரையாளரைக் குற்றவாளி என்று நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. 17 ஆண்டுகளுக்கு முன்னர் மலேசியாவுக்குத் தப்பியோடிய சான் சேங், 59, டிசம்பர் 2016ஆம் ஆண்டு சிங்கப்பூருக்கு மீண்டும் அனுப்பப்பட்டார்.
1999ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் ஓல்ட் ஏர்போட்டில் நடந்த உயர்நிலைப் பள்ளிகளுக்கான முகாமில் பங்கேற்ற ஐந்து சிறுவர்களை அவர் மானபங்கம் செய்ததாக நீதிமன்றம் உறுதி செய்தது. சான் அவ்வப்போது இது போன்ற முகாம்களை நடத்துவதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
நான்கு சிறுவர்களுடன் தொடர்புடைய மேலும் சில மானபங்கக் குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணை நிறைவடையவில்லை.
60,000 வெள்ளி பிணையில் விடுவிக்கப்பட்ட சான் ஜூலை 29ஆம் தேதி மீண்டும் நீதிமன்றத்தில் முன்னிலையாகவேண்டும்.

