கரையோரப் பூந்தோட்டத்தில் கள்ளக் காதலியைக் கொலை செய்ததாக 51 வயது லெஸ்லி கூ குவீ ஹோக் மீது சுமத்தப்பட்ட குற்றம் நிரூபணமான நிலையில், பண மோசடி, நம்பிக்கை மோசடி ஆகிய குற்றச்சாட்டுகள் தொடர்பிலான வழக்கு விசாரணைக்காக அவர் நேற்று மீண்டும் நீதிமன்றத்தில் முன்னிலையானார்.
பண மோசடி செய்ததாக நான்கு குற்றச்சாட்டுகள், நம்பிக்கை மோசடி செய்ததாக இரு குற்றச்சாட்டுகள் ஆகியவற்றை அவர் எதிர்நோக்கினார். தாம் வேலை செய்த நிறுவனம் ஒன்றில் $24,000 பணத்தைக் கையாடியதாக லெஸ்லி மீது குற்றஞ்சாட்டப்பட்டது.

