போதைப்பொருள் குற்றங்களை எதிர்நோக்கும் முன்னாள் ஆசிரியர்

டல்விச் காலேஜ் ஷங்ஹாய் அனைத்துலகப் பள்ளியின் முன்னாள் தலைமையாசிரியரான பிரிட்டனைச் சேர்ந்த டேமியன் மைக்கல் ஷார்னோக், 60, போதைப்பொருள் புழக்கம் தொடர்பான ஐந்து குற்றச்சாட்டுகளை இங்குள்ள நீதிமன்றத்தில் எதிர்நோக்குகிறார். ‘ஐஸ்’ போதைப்பொருளை உட்கொண்டதாக அவர்மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டும் அவற்றில் அடங்கும்.

புக்கிட் பாத்தோக் வெஸ்ட் அவென்யூ 8ல் உள்ள டல்விச் காலேஜ் பள்ளியின் சிங்கப்பூர் கிளையிலும் ஷார்னோக் முன்னதாக பணிபுரிந்திருந்தார். இவ்வாண்டு மார்ச் 5ஆம் தேதி அவர் போதைப்பொருள் குற்றங்களைப் புரிந்ததாகக் கூறப்படுகிறது. ‘ஐஸ்’ போதைப்பொருளைத் தவிர்த்து, ‘எக்ஸ்டசி’ எனும் போதைப்பொருளை ஷார்னோக் உட்கொண்டதாக அவர்மீது குற்றஞ்சாட்டப்படுகிறது.

பால்மோரல் ரோட்டில் உள்ள குட்வுட் கிராண்ட் கொன்டோமினிய வீட்டில் அவரிடம் 11 பாக்கெட்டுகளில் அடங்கிய போதைப்பொருள் கண்டறியப்பட்டதாகக் கூறப்படுகிறது.

அத்துடன், ஷார்னோக்கிடம் ஏழு மாத்திரைகளும் போதைப்பொருள் உட்கொள்ள உதவும் சாதனங்களும் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது.

இந்த வழக்கில் வழக்கறிஞர் ஒருவரால் பிரதிநிதிக்கப்படும் ஷார்னோக் $10,000 பிணையில் நேற்று விடுவிக்கப்பட்டார். அவரது வழக்கு அடுத்த மாதம் 20ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!