ஆற்றலை ஆழப்படுத்துவதற்கான திட்டங்கள் தொடக்கம்

ஆற்றலை ஆழப்படுத்துவதற்கான திட்டங்கள் தொடக்கம்

1 mins read
4a7e0f5f-e3b0-439b-aa97-76654ef09752
-

புத்தாக்கத்தைச் சார்ந்த பொருளியலை நோக்கிச் செல்லும் நாட்டின் முயற்சிக்கு உதவியாக வடிவமைப்புத் தொழில்துறைக்கான புதிய தேசிய கட்டமைப்பு வர்த்தக தொழில் அமைச்சர் சான் சுன் சிங்கால் தொடங்கி வைக்கப்பட்டது.

25 வேலை பங்களிப்புக்கான ஆற்றல்கள், வாழ்க்கைத்தொழில் பாதைகள், பயிற்சித் திட்டங்கள் ஆகியவற்றை வடிவமைப்புக்கான ஆற்றல் கட்டமைப்பு அமைத்து தரும். இது வர்த்தகம், வடிவமைப்பு, புத்தாக்கம், தொழில்நுட்பம் ஆகிய நான்கு பாதைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.

ஊழியர்கள் தங்களை மேம்படுத்திக் கொள்ளவும் நிறுவனங்கள் வடிவமைப்பு சார்ந்த பாதையைத் தேர்ந்தெடுக்கவும் இந்தப் பாதைகள் உதவும். சிங்கப்பூர் ஸ்கில்ஸ்ஃபியூச்சர் அமைப்பு, சிங்கப்பூர் ஊழியரணி அமைப்பு ஆகியவற்றுடன் இணைந்து தான் உருவாக்கிய இந்தக் கட்டமைப்பு மூலம் வடிவமைப்பாளர்கள் தங்கள் ஆற்றல்களை ஆழப்படுத்தவும் விரிவுப்படுத்தவும் வழிவகுக்கிறது.

அதே வேளையில் வடிவமைப்பாளர் அல்லாதவர்கள் இந்தக் கட்டமைப்பு மூலம் தங்கள் வேலையிடத்தில் வடிவமைப்பு தொடர்பான ஆற்றல்களைக் கற்றுக்கொள்ளாலம் என்றும் சிங்கப்பூர் வடிவமைப்பு மன்றம் விளக்கியது.