நோயாளிக்கு பக்கவிளைவுகள் குறித்து தெரிவிக்காததால் மருத்துவர் ஒருவருக்கு சிங்கப்பூர் மருத்துவர் மன்றம் எதிர்பாராத அளவுக்கு நூறாயிரம் வெள்ளி அபராதம் விதித்தது.
இதனால் நாடு முழுவதும் விமர்சனங்கள் எழுந்தன.
இந்த நிலையில் மருத்துவருக்கு விதிக்கப்பட்ட அபராதம் குறித்து விசாரணை நடத்திய மேல் முைறயீட்டு நீதிமன்றம் அவரை குற்றச்சாட்டிலிருந்து விடுவித்துள்ளது.
கடந்த ஜனவரி மாதம் தனியார் எலும்பு மூட்டு அறுவை சிகிச்சை மருத்துவரான லிம் லியான் ஆர்னுக்கு சிங்கப்பூர் மருத்துவர் மன்றத்தின் ஒழுங்கு நடுவர் மன்றம் 100,000 வெள்ளி அபராதம் விதித்தது. ஆனால் இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது.
தண்டனை மிகவும் கடுமையானது என்றும் தற்காப்பு மருத்துவ நடைமுறைகளில் ஈடுபடும் மருத்துவர்களின் சேவைகளுக்கு ஊறு விளைவிக்கும் என்றும் கூறி சிங்கப்பூர் மருத்துவர் மன்றத்தின் தீர்ப்புக்கு எதிரான மனுவில் ஆயிரக்கணக்கானவர்கள் கையெழுத்து இட்டனர்.
மேலும் நடுவர் மன்ற தீர்ப்பின் விளைவுகள் குறித்து் நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டது.
'ஸ்டிராய்ட்' ஊசி பொதுவாக நோயாளிகளுக்கு வழங்கப்படும் மருந்தாகும். இதனால் மிக அரிதாக பக்க விளைவுகள் ஏற்படலாம். மேலும் பக்கவிளைவுகள் தற்காலிகமானவை.
இந்த நிலையில் தமது தோலின் நிறம் மாறியதாகவும் கொழுப்புச் சத்து குறைந்துவிட்டதாகவும் கூறி அந்த மருத்துவருக்கு எதிராக பாதிக்கப்பட்ட நோயாளி புகார் அளித்திருந்தார்.
இதையடுத்து மருத்துவருக்கு 100,000 வெள்ளி அபராதம் விதிக்கப்பட்டது.
கடந்த பிப்ரவரி மாதம் மருத்து வருக்கு எதிரான தண்டனையை மறுபரிசீலனை செய்யும்படி மருத்துவர் மன்றத்தை சுகாதார அமைச்சு கேட்டுக்கொண்டது.
இதன் காரணமாக 100,000 வெள்ளி அபராதம் அதிகம் என்று முடிவு செய்த சிங்கப்பூர் மருத்துவர் மன்றம், அபராதத்தை 20,000 வெள்ளிக்குக் கீழ் குறைத்துக் கொள்வதாக மேல் முறையீட்டு நீதிமன்றத்தில் தெரிவித்தது.
ஆனால் அபராதத்தை குறைக்கும் சிங்கப்பூர் மருத்துவர் மன்றத்தின் முடிவை ஏற்றுக்கொள்ள மூவர் அடங்கிய மேல் முறையீட்டு நீதிமன்றம் மறுத்துவிட்டது.
மேலும் உண்மையில் மருத்து வர் எந்தத் தவறும் செய்யவில்லை என்று் நீதிபதிகள் கூறினர்.
நேற்று நடுவர் மன்றத்தின் பெரும் அபராதம் குறித்து தீர்ப்பு வழங்கிய தலைமை நீதிபதி சுந்தரேஷ் மேனன், விவேகமற்ற, தவறான, ஆதாரமற்ற முடிவு அது என்று குறிப்பிட்டார்.
நீதிபதி ஆண்ட்ரு பாங், நீதிபதி ஜுடித் பிரகாஷ் ஆகியோர் அமர்வில் இடம்பெற்ற இதர இரண்டு நீதிபதிகள் ஆவர்.

